Bhagavad Gita: Chapter 5, Verse 21

பா3ஹ்யஸ்ப1ர்ஶேஷ்வஸக்1தா1த்1மா வின்த3த்1யாத்1மனி யத்1ஸுக2ம் |

ஸ ப்3ரஹ்மயோக3யுக்1தா1த்1மா ஸுக2மக்ஷயமஶ்னுதே1 ||
21 ||

பாஹ்ய-ஸ்பர்ஶேஷு—--வெளிப்புற உணர்வு இன்பத்தில்; அஸக்த-ஆத்மா--—பற்றற்றவர்கள்; விந்ததி—-- அடைகிறார்கள்; ஆத்மனி—--தன்னிடத்தில்; யத்—--எவை ; ஸுகம்—--ஆனந்தம்; ஸஹ--—அந்த நபர்; ப்ரஹ்ம-யோக யுக்த-ஆத்மா--—யோகத்தின் மூலம் கடவுளுடன் இணைந்தவராக; ஸுகம்—--மகிழ்ச்சியை; அக்ஷயம்--—வரம்பற்ற; அஶ்னுதே— அனுபவிக்கிறார்

Translation

BG 5.21: புற புலன் இன்பங்களில் பற்று இல்லாதவர்கள் தெய்வீகத்தை சுயமாக உணர்கிறார்கள். யோகத்தின் மூலம் கடவுளோடு ஐக்கியமாகி, அவர்கள் முடிவில்லாத மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர்.

Commentary

வேத சாஸ்திரங்கள் கடவுளை வரம்பற்ற தெய்வீக ஆனந்தத்தின் பெருங்கடல் என்று மீண்டும் மீண்டும் விவரிக்கின்றன:

ஆனந்தோ3 ப் 3ரஹ்மேதி 1 வ்யஜாநாத்1 (தை1த்1தி1ரீய உப1நிஷத்3ம் 3.6)

‘கடவுளை ஆனந்தமாக அறிந்து கொள்ளுங்கள்.’

கே1வலானுப4வானந்த3 ஸ்வரூப1ஹ ப1ரமேஶ்வரஹ

(பா43வத1ம் 7.6.23)

‘கடவுளின் வடிவம் தூய பேரின்பத்தால் ஆனது.’

ஆனந்த3 மாத்1ர க1ர பாத3 முகோ23ராதி3 (பத்3ம பு1ராணம்)

‘கடவுளின் கைகள், கால்கள், முகம், வயிறு முதலிய அனைத்தும் ஆனந்தத்தால் ஆனவை.’

ஜோ ஆனந்த3 ஸிந்து4 ஸுக2ராஸீ (ராமாயணம்)

‘கடவுள் ஆனந்தம் மற்றும் மகிழ்ச்சியின் கடல்.’

இந்த மந்திரங்கள் மற்றும் வேத வசனங்கள் அனைத்தும் தெய்வீக பேரின்பம்-- கடவுளின் ஆளுமையின் தன்மை என்பதை வலியுறுத்துகின்றன. யோகி, புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றைக் கடவுளில் ஈடு படுத்துபவர்.