Bhagavad Gita: Chapter 9, Verse 22

அனன்யாஶ்சி1ன்த1யன்தோ1 மாம் யே ஜனா: ப1ர்யுபா1ஸதே1 |

தே1ஷாம் நித்1யாபி4யுக்1தா1னாம் யோக3க்ஷேமம் வஹாம்யஹம் ||
22||

அனன்யாஹா——எப்பொழுதும்; சிந்தயந்தஹ——நிலைநிருத்தி; மாம்——என்னை; யே——யார்; ஜனாஹா——நபர்கள்; பர்யுபாஸதே——பிரத்தியேகமாக வழிபடுகிறவர்கள்; தேஷாம்——அவர்களுடைய; நித்ய அபியுக்தானாம்——எப்பொழுதும் ஈடுபடுபவர்கள்; யோக——ஆன்மீக சொத்துக்களை வழங்கி; க்ஷேமம்——ஆன்மீக சொத்துக்களைப் பாதுகாத்து; வஹாமி——ஏந்துவேன்; அஹம்——நான்

Translation

BG 9.22: எப்பொழுதும் மனதை என்னிடம் நிலைநிருத்தி, என்னிடம் பிரத்யேக பக்தியில் ஈடுபடுபவர்கள் இருக்கிறார்கள். எவருடைய மனம் எப்பொழுதும் என்னில் லயிக்கப்படுகிறதோ, அவர்களுக்கு, அவர்களிடம் இல்லாததைக் கொடுத்து, ஏற்கனவே அவர்கள் உடைமையாக பெற்றிருப்பதை பாதுகாக்கிறேன்.

Commentary

ஒரு தாய் தன்னை முழுமையாகச் சார்ந்திருக்கும், திக்கற்ற தன் குழந்தையை கைவிட நினைக்கவே மாட்டாள். ஆத்மாவின் உயர்ந்த மற்றும் நித்திய தாய் கடவுள். இந்த வசனத்தில், கடவுள் தன்னிடம் பிரத்தியேகமாக சரணடையும் ஆன்மாக்களுக்கு அத்தகைய தாயின் உறுதியை வழங்குகிறார். ஒரு திருமணமான ஆண் தன் மனைவி மற்றும் குழந்தைகளைப் பராமரிக்கும் பொருப்பைச் சுமப்பது போல, வஹாமி அஹம் என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன, அதாவது, ‘எனது பக்தர்களைப் பராமரிக்கும் சுமையை நான் தனிப்பட்ட முறையில் சுமக்கிறேன்’. கடவுள் இரண்டு விஷயங்களை வாக்களிக்கிறார். முதலாவது யோகம்-அவர் தம் பக்தர்களிடம் இல்லாத ஆன்மீகச் சொத்துக்களை அவர்களுக்கு வழங்குகிறார். இரண்டாவது க்ஷேமம்—அவரது பக்தர்கள் ஏற்கனவே வைத்திருக்கும் ஆன்மீக சொத்துக்களை அவர் பாதுகாக்கிறார்.

இருப்பினும், இதற்கு அவர் வைத்த நிபந்தனை பிரத்தியேக சரணாகதி. தாய் மற்றும் குழந்தையின் அதே ஒப்புமை மூலம் இதை மீண்டும் புரிந்து கொள்ள முடியும். புதிதாகப் பிறந்த குழந்தை தனது தாயை முழுமையாக சார்ந்துள்ளது, அவர் குழந்தையின் நலனை முழுவதுமாக கவனித்துக்கொள்கிறார். குழந்தைக்கு ஏதாவது தேவைப்படும்போதெல்லாம் அழுகிறது; தாய் சுத்தப்படுத்தி உணவளித்து குளிப்பாட்டி மற்றும் பல விதமாக குழந்தையின் நலனை முழுவதுமாக கவனித்துக்கொள்கிறார். ஆனால் குழந்தை ஐந்து வயது வயது ஆகும் பொழுது, ​​அது தனக்காக சில செயல்களைச் செய்யத் தொடங்குகிறது. அதே அளவிற்கு, தாய் தனது பொறுப்புகளை குறைக்கிறார். அதே குழந்தை தனது இளமை பருவத்தில் எல்லாப் பொருப்புகளையும் ஏற்கும்பொழுது, ​​தாய் தன் பொறுப்புகளைத் துறக்கிறாள். இப்பொழுது தந்தை வீட்டிற்கு வந்து மகன் எங்கே என்று விசாரித்தால், தாய், 'பள்ளி முடிந்து வீடு திரும்பவில்லை. அவன் தன் நண்பர்களுடன் சினிமாவுக்குச் சென்றிருக்க வேண்டும்.’ அவளின் அணுகுமுறை இப்பொழுது அவனிடம் மிகவும் நடுநிலையாக இருக்கிறது. ஆனால் அதே பையன் ஐந்து வயதாக இருந்தபொழுது, ​​பள்ளியிலிருந்து வீடு திரும்புவதற்கு பத்து நிமிடம் தாமதமாகிவிட்டால், அம்மா அப்பா இருவரும் 'என்ன நடந்தது? என்று கவலைப்படத் தொடங்கி. பள்ளியுடன் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்வோம்.’ என்று முடிவெடுப்பார்கள்.

இந்த வழியில், குழந்தை அதிக பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதால், தாய் தனது பொறுப்புகளை விட்டுவிடுகிறார். கடவுளின் கோட்பாடும் இதை ஒத்தது. நாம் நமது செயல்களைச் செய்பவர்கள் என்று நினைத்து, நமது சுதந்திரமான விருப்பப்படி செயல்படும்பொழுது , ​​கடவுள் தனது அருளை வழங்குவதில்லை. அவர் நமது கர்மங்களைக் குறித்துக் கொண்டு பலனைத் தருகிறார். நாம் அவரிடம் ஓரளவு சரணடைந்து, ஓரளவு பொருள் ஊன்றுகோலைச் சார்ந்து இருக்கும் பொழுது, ​​கடவுளும் ஓரளவு தன் அருளை நமக்குத் தருகிறார். மேலும் நாம் அவருக்குப் பிரத்தியேகமாக நம்மை அர்ப்பணிக்கும்பொழுது -​​மாமேகம் ஶரணம் வ்ரஜ கடவுள் தனது முழுமையான அருளைத் தந்து, நம்மிடம் இருப்பதைப் பாதுகாப்பதன் மூலம், முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு நமது பற்றாக்குறையை தீர்த்து வைக்கிறார்.