யத்1க1ரோஷி யத3ஶ்னாஸி யஜ்ஜுஹோஷி த3தா3ஸி யத்1 |
யத்1த1ப1ஸ்யஸி கௌ1ன்தே1ய த1த்1கு1ருஷ்வ மத3ர்ப1ணம் ||27||
யத்——எதை; கரோஷி——நீ செய்தாலும்; யத்——எதை; அஶ்நாசி——நீ உட்கொள்வதை ; யத்——எதை; ஜுஹோஷி—— புனித நெருப்புக்கு அர்ப்பணித்தாலும்; ததாஸி——நீ கொடையாக வழங்கினாலும்; யத்——எதுவாக இருந்தாலும்; யத்——எதை; தபஸ்யஸி——நீ துறந்தாலும் ; கௌந்தேய-—-குந்தியின் மகன் அர்ஜுனன்; தத்——அதை; குருஷ்வ——செய்; மத் அர்ப்பணம்——எனக்கான காணிக்கையாக
Translation
BG 9.27: குந்தியின் மகனே, நீ எதைச் செய்தாலும், எதைச் சப்பிட்டாலும், புனிதமான நெருப்புக்குப் எதைக்காணிக்கையாக் கொடுத்தாலும் , எதைப் பரிசாகக் கொடுத்தாலும், என்ன துறவறம் செய்கிறாயோ, அவற்றை எனக்கு காணிக்கையாகச் செய்.
Commentary
முந்தைய வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் எல்லாப் பொருட்களையும் தனக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று கூறினார். இப்பொழுது எல்லா செயல்களையும் தமக்கே அர்ப்பணம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். எத்தகைய சமூகக் கடமைகளில் ஈடுபட்டாலும், எந்த சைவ உணவைச் சப்பிட்டாலும், மது அல்லாத பானங்கள் அருந்தினாலும், எந்த வைதீகச் சடங்குகளைச் செய்தாலும், எத்தகைய விரதங்களையும், துறவறங்களையும் கடைப்பிடித்தாலும், அனைத்தையும் மானசீகமாகப் ஒப்புயர்வற்ற கடவுளுக்குச் சமர்ப்பிக்க வேண்டும். பெரும்பாலும், மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையிலிருந்து பக்தியைப் பிரித்து, கோவில்களில் மட்டுமே செய்ய வேண்டிய ஒன்றாக பார்க்கிறார்கள். இருப்பினும், பக்தி என்பது கோவில் சுவர்களின் சுற்றளவில் மட்டும் நின்றுவிடக் கூடாது; பக்தியில் நாம் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் ஈடுபட வேண்டும்.
நாரத முனிவர் பக்தியை இவ்வாறு வரையறுக்கிறார்:
நாரத3ஸ்து1 த1த3ர்பிதா1 கி2லாச்சா1ரதா1 த1த்3விஸ்மரனே
ப1ரமவ்யாகு1லதே1தி1
(நாரத3 ப4க்1தி1 த3ர்ஶன், ஸூத்1ரம்19)
‘பக்தி என்பது உங்கள் ஒவ்வொரு செயலையும் கடவுளுக்குச் சமர்ப்பிப்பதும், அவரைப் பற்றிய நினைவை இழக்க நேரிட்டால் தீவிரமான பிரிவினை உள்ளத்தில் உணர்வதும் ஆகும்.’ நமது படைப்புகள் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டு மனரீதியாக ஒப்படைக்கப்படும்பொழுது, அது அர்ப்பணம் எனப்படும். அவ்வாறு செய்வது, பொருள் வாழ்வின் இவ்வுலக செயல்பாடுகளை கடவுளின் தெய்வீக சேவையாக மாற்றுகிறது. ஸ்வாமி விவேகானந்தர் வேலை குறித்த இந்த அணுகுமுறையை வெளிப்படுத்தினார்: 'எந்த வேலையும் மதச்சார்பற்றது. எல்லாமே பக்தியும் சேவையும்தான்.’ துறவி கபீர் தனது ஈரடிச் செய்யுளில் கூறினார்:
ஜஹான் ஜஹான் ச1லூன் க1ருன் ப1ரிக்1ரமா, ஜோ ஜோ க1ருன் ஸோ
ஸேவா ஜப3 ஸோவூன் க1ருன் த3ண்ட3வத்1, ஜானூன் தே3வ ந தூ3ஜா
'நான் எங்கு நடந்தாலும், நான் இறைவனின் கோவிலை சுற்றி வருவதை உணர்கிறேன்; நான் என்ன செய்தாலும், அதை கடவுளுக்கு செய்யும் சேவையாகவே பார்க்கிறேன். நான் தூங்கச் செல்லும்பொழுது, நான் கடவுளுக்கு வந்தனம் செலுத்துகிறேன் என்ற உணர்வை தியானிக்கிறேன். இந்த வழியில், எப்பொழுதும் அவருடன் ஐக்கியமாகி இருக்கிறேன்.’ இதன் முக்கியத்துவத்தை உணராமல், பலர் பின்வரும் வசனத்தை கோயிலில் படிக்கிறார்கள்:
கா1யேன வாசா மனஸேந்தி3ரியைர் வா
புத்3யாத்மனா வானுஸ்ரித1-ஸ்வபா4வாத்1
க1ரோதி1 யத்1 யத்1 ஸக11லம் ப1ரஸ்மை
நாராயணாயேதி1 ஸமர்ப1யேத்1த1த்1 (பா4க3வத1ம் 11.2.36)
‘உடல், வார்த்தை, மனம், புலன்கள், புத்தி ஆகியவற்றால் ஒருவருடைய தனிப்பட்ட இயல்புக்கு ஏற்ப எதைச் செய்தாலும், அது ஒப்புயர்வற்ற நாராயணனுக்குப் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.’ இருப்பினும், வேத சடங்குகளில் செய்யப்படுவது போல் இந்த ப்ரஸாதம் வேலையின் முடிவில் ஸ்ரீக்ருஷ்ணாய ஸமர்ப்பணம் அஸ்து போன்ற மந்திரங்களை மட்டும் ஓதுவதன் மூலம் சமர்ப்பிக்கப்பட கூடாது. இறைவனின் இன்பத்திற்காகவே நாம் உழைக்கிறோம் என்ற உணர்வைப் செயலைச் செய்யும்போதே நிலைப்படுத்துவது அவசியம். எல்லா வேலைகளும் தமக்கே அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்று கூறிய ஸ்ரீ கிருஷ்ணர் இப்பொழுது இதைச் செய்வதன் பலன்களைப் பட்டியலிடுகிறார்.