கி1ம் பு1னர்ப்1ராஹ்மணா: பு1ண்யா ப4க்1தா1 ராஜர்ஷயஸ்த1தா2 |
அனித்1யமஸுக2ம் லோக1மிமம் ப்1ராப்1ய ப4ஜஸ்வ மாம் ||33||
கிம்——என்ன; புனஹ——பின்னர்; ப்ராஹ்மணாஹா——முனிவர்கள்; புண்யாஹா——தகுதியுள்ளவர்கள்; பக்தாஹா——பக்தர்கள்; ராஜ—ரிஷயஹ——துறவி அரசர்கள்; ததா——மற்றும்; அநித்யம்——நிலையற்ற; அஸுகம்——மகிழ்ச்சியற்ற; லோகம்——உலகம்; இமாம்——இந்த; ப்ராப்ய——அடைந்து; பஜஸ்வ—பக்தியில் ஈடுபடு; மாம்——என்னிடம்
Translation
BG 9.33: அப்படியானால், அரசர்கள் மற்றும் முனிவர்களைப் பற்றி என்ன பேசுவது? எனவே, இந்த நிலையற்ற மற்றும் மகிழ்ச்சியற்ற உலகத்திற்கு வந்து, என்னிடம் பக்தியுடன் ஈடுபடு.
Commentary
மிகவும் அருவருப்பான பாவிகளும் பக்தியின் பாதையில் வெற்றி பெருவார்கள் என்று உறுதியளிக்கும் பொழுது, ஏன் அதிக தகுதியுள்ள ஆன்மாக்கள் சந்தேகம் கொள்ள வேண்டும்? அரசர்களும் முனிவர்களும் ப்ரத்யேக பக்தியில் (அனன்ய பக்தியில்) ஈடுபட்டு உன்னத நிலையை அடைவதில் இன்னும் உறுதியாக இருக்க வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் இவ்வாறு அழைப்பு விடுக்கிறார், ‘உன்னைப் போன்ற ஒரு புனிதமான அரசன் உலகம் தற்காலிகமானது மற்றும் துன்பத்தின் இடம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். எல்லையற்ற நித்திய மகிழ்ச்சியை உடையவனான என்னிடம் உறுதியான பக்தியில் ஈடுபடு. இல்லையேல் அரச குடும்பத்தில் பிறக்கும் பாக்கியம், நல்ல கல்வி, வசதியான பொருளாதார சூழ்நிலை அனைத்தும் வீணாகிவிடும்.’