Bhagavad Gita: Chapter 9, Verse 13

மஹாத்1மானஸ்து1 மாம் பா1ர்த2 தை3வீம் ப்1ரக்1ருதி1மாஶ்ரிதா1: |

1ஜன்த்1யனன்யமனஸோ ஞாத்1வா பூ4தா1தி3மவ்யயம் ||13||

மஹா—ஆத்மானஹ——உயர்ந்த ஆத்மாக்கள்; து——ஆனால்; மாம்——என்னை; பார்த——ப்ரிதாவின் மகன் அர்ஜுனன்; தெய்வீம் ப்ரகி1ரிதி1ம்——தெய்வீக ஆற்றலில்; ஆஶ்ரிதாஹா——அடைக்கலம் எடுக்கும்; பஜந்தி——பக்தியில் ஈடுபடுகின்றனர்; அனன்ய—மானஸஹ——மனதை பிரத்தியேகமாக நிலைநிருத்தி; ஞாத்வா——அறிந்து; பூத——எல்லா படைப்புகளின்; ஆதிம்——தோற்றத்தின்; அவ்யயம்——அழியாத

Translation

BG 9.13: ஆனால், என் தெய்வீக ஆற்றலில் அடைக்கலம் எடுக்கும் உயர்ந்த ஆன்மாக்கள், ஓ பார்த, என்னை,அனைத்துப் படைப்புகளின் பிறப்பிடமான கிருஷ்ணபகவான் ஆக அறிந்திருக்கிறார்கள் . அவர்கள் தங்கள் மனதை என்னிடமே நிலைநிருத்தி என் பக்தியில் ஈடுபடுகிறார்கள்.

Commentary

ஸ்ரீ கிருஷ்ணரின் சொற்பொழிவின் பாணி என்னவென்றால், அவர் முற்றிலும் மாறுபட்ட ஒப்பீடுகளைச் செய்வதன் மூலம் அவருடைய அறிவுரையை வலியுறுத்துகிறார். முந்தின வசனத்தில் ஏமாந்து குழப்பமடைந்தவர்களின் வழிகளை விவரித்த பிறகு, இப்பொழுது உயர்ந்த ஆத்மாக்களைப் பற்றி பேசுகிறார். பொருள் வாழ்க்கை என்பது ஒரு நீண்ட கனவு, இது பொருள் ஆற்றலின் கீழ் ஊசலாடும் ஆத்மாக்களால் அனுபவிக்கப்படுகிறது. இதற்கு நேர்மாறாக, தங்கள் அறியாமையிலிருந்து விழித்தெழுந்து, கெட்ட கனவைப் போல ஜட உணர்வை ஒதுக்கித் தள்ளுபவர்களே உயர்ந்த ஆத்மாக்கள். பொருள் சக்தியான மாயாவின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர்கள் இப்பொழுது தெய்வீக யோகமாயா சக்தியின் அடைக்கலத்தில் உள்ளனர். இத்தகைய அறிவொளி பெற்ற ஆன்மாக்கள் கடவுளுடனான தங்கள் நித்திய உறவின் ஆன்மீக யதார்த்தத்தை உணர்ந்தவர்கள்.

கடவுள் தனது ஆளுமையில் இரு அம்சங்களையும் கொண்டிருப்பது போல்-உருவமற்ற, மற்றும் தனிப்பட்ட வடிவம்-அவருடைய யோகமாயா ஆற்றலும் இரண்டு அம்சங்களையும் கொண்டுள்ளது. இது உருவமற்ற ஆற்றல், ஆனால் அது ராதை, சீதா, துர்கா, லட்சுமி, காளி மற்றும் பார்வதி போன்ற தனிப்பட்ட வடிவத்திலும் வெளிப்படுகிறது. இந்த தெய்வீக ஆளுமைகள் அனைத்தும் ஒருவருக்கொருவர் வேறுபடாத கடவுளின் தெய்வீக ஆற்றலின் வெளிப்பாடுகள். மேலும் அவை அனைத்தும் கிருஷ்ணர், ராமர், சிவன் மற்றும் நாராயணன் போன்ற ஒரே கடவுளின் வெவ்வேறு வடிவங்கள்.

ப்3ரஹ்ம வைவர்த1 பு1ராணம் கூறுகிறது:

யதா2 த்1வம் ராதி4கா1 தே3வி கோ3லோகே1 கோ3கு1லே த1தா2

வைகு1ண்டே21 மஹாலக்ஷ்மீ ப4வதி11 ஸரஸ்வதி1

1பி1லஸ்ய ப்1ரியா கா1ந்தா1 பா4ரதே1 பா4ரதீ1 ஸதீ1

து3வாரவத்1யாம் மஹாலக்ஷ்மி ப4வதீ1 ருக்1மிணீ ஸதீ1

த்1வம் ஸீதா1 மிதி1லாயாம் ச1 த்1வச்1சா2யா தி3ரௌப1தீ1 ஸதீ1

ராவணேன ஹ்ரிதா1 த்1வம் ச1 த்1வம் ச1 ராமஸ்ய கா1மினீ

‘ராதா, நீங்கள் கோலோகத்தின் (ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக இருப்பிடம்) மற்றும் கோகுலத்தின் தெய்வீக தேவி (ஸ்ரீ கிருஷ்ணர் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் அவதரித்த பொழுது ஜட உலகில் அவர் தங்கியிருந்த இடம்). நீங்கள் வைகுண்டத்தில் (விஷ்ணுவின் இருப்பிடம்) மகாலட்சுமியாக இருக்கிறீர்கள். நீங்கள் கபிலரின் மனைவி (கடவுளின் பரம்பரைகளில் ஒன்று). நீங்கள் துவாரகையில் ருக்மணியாக (ஸ்ரீ கிருஷ்ணரின் மனைவி) வசிக்கிறீர்கள். மிதிலா நகரில் சீதையாக பிரகடனம் செய்தீர்கள். பாண்டவர்களின் மனைவி திரௌபதி உங்கள் நிழலின் வெளிப்பாடாக இருந்தார். சீதையின் வடிவில் ராவணனால் கடத்தப்பட்ட நீங்கள் ராமரின் மனைவி.

இந்த வசனத்தில், மகத்தான ஆத்மாக்கள் கடவுளின் தெய்வீக ஆற்றலில் தங்குமிடம் பெறுவதை ஸ்ரீ கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். காரணம், தெய்வீக அருள், அறிவு, அன்பு, அனைத்தும் கடவுளின் தெய்வீக ஆற்றல்கள் மற்றும் தெய்வீக யோகமாயா சக்திக்கு அடிபணிந்தவை, அதாவது ராதை. எனவே, யோகமயாவின் அருளால், ஒருவர் கடவுளின் அன்பு, அறிவு மற்றும் அருளைப் பெறுகிறார். தெய்வீக அருளைப் பெரும் உயர்ந்த ஆன்மாக்கள், தெய்வீக அன்பைப் பெருகிறார்கள், மேலும் கடவுள் மீது இடைவிடாத பக்தியில் ஈடுபடுகிறார்கள்.