ப்1ரக்1ருத்1யைவ ச1 க1ர்மாணி க்1ரியமாணானி ஸர்வஶ: |
ய: ப1ஶ்யதி1 த1தா2த்1மானமக1ர்தா1ரம் ஸ ப1ஶ்யதி1 ||30||
ப்ரகி1ரிதி1யா—--பொருள் இயற்கையால்; ஏவ—--உண்மையாக; ச--—மேலும்; கர்மாணி—--செயல்கள்; க்ரியமாணானி--—செய்யப்படுகின்றன; ஸர்வஶஹ—--அனைத்தும்; யஹ----யார்; பஶ்யதி—பார்க்கிராரோ; ததா—--மேலும்; ஆத்மானம்—---(உடலுற்ற) ஆன்மாவை; அகர்தாரம்—--செயலற்றதாக; ஸஹ--—அவர்கள்; பஶ்யதி--—பார்க்கிறார்கள்
Translation
BG 13.30: அனைத்து செயல்களும் (உடலின்) ஜட இயற்கையால் செய்யப்படுகின்றன. அதே சமயம் உடலுற்ற ஆத்மா உண்மையில் எதையும் செய்வதில்லை என்பதை யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் மட்டுமே உண்மையில் பார்க்கிறார்கள்.
Commentary
தந்த்ர பகவத் கூறுகிறது: அஹங்கா1ராத்1 து1 ஸம்ஸாரோ ப4வேத்1 ஜீவஸ்ய ந ஸ்வத1ஹ 'உடல் என்ற அகங்காரமும், செய்பவன் என்ற அகங்காரமும் ஆன்மாவை வாழ்வுக்கும் மரணத்திற்கும் உள்ள ஸம்சாரத்தில் சிக்க வைக்கின்றன.’ பொருள் உணர்வில், அகங்காரம் நம்மை உடலுடன் அடையாளப்படுத்துகிறது, மேலும் நாம் உடலின் செயல்களை 'நான் இதைச் செய்கிறேன்... நான் அதைச் செய்கிறேன்.... ‘ என்று கருதி அச்செயல்களை ஆன்மாவுக்கு உடமையாக கருதுகிறோம். ஆனால் அறிவொளி பெற்ற ஆன்மா, உண்ணும் பொழுதும், அருந்தும்பொழுதும், பேசும் பொழுதும், நடக்கும் பொழுதும், மற்ற எல்லாச் செயல்களை செய்யும் பொழுதும் உடல்தான் செயல்படுகிறது என்பதை உணர்கிறது. ஆனாலும், உடலால் செய்யப்படும் செயல்களின் பொறுப்பை அது தட்டிக்கழிக்க முடியாது. அவரே அதில் போரிடாவிட்டாலும் நாடு போருக்குப் போவது என்ற முடிவிற்கு குடியரசுத் தலைவர் பொறுப்பை ஏற்கிறார், அவ்வாறே, உயிர்களின் செயல்கள் உடல், மனம், மற்றும் புத்தியால் செய்யப்பட்டாலும் அதற்கு ஆன்மாவே பொறுப்பாகும். இந்த காரணத்திற்காக ஒரு ஆன்மீக பயிற்சியாளர் இந்த இரண்டு அம்சங்களையும் மனதில் கொள்ள வேண்டும். மகரிஷி வஸிஷ்டர் பகவான் ஸ்ரீ ராமருக்கு அறிவுறுத்தினார்: க1ர்தா1 ப3ஹிர்க1ர்தா1ந்த1ர்லோகே1 விஹார ராக4வ (யோக3 வஸிஷ்ட்1) 'ராம், வேலை செய்யும் பொழுது, வெளிப்புறமாக முடிவுகள் உங்களைச் சார்ந்தது போல் உழைக்கவும்; ஆனால் உள் வாரியாக, நீங்கள் செய்யாதவர் என்பதை உணருங்கள்.