யதா2 ஸர்வக3த1ம் ஸௌக்ஷ்ம்யாதா3கா1ஶம் நோப1லிப்1யதே1 |
ஸர்வத்1ராவஸ்தி2தோ1 தே3ஹே த1தா2த்1மா நோப1லிப்1யதே1 ||33||
யதா--—எவ்வாறு; ஸர்வ-கதம்—--அனைத்திலும் வியாபித்து இருக்கும்; ஸௌக்ஷ்ம்யாத்--—நுட்பநுணுக்கத்தினால்; ஆகாஶம்--—விண்வெளி; ந—--இல்லை; உபலிப்யதே--—மாசுபடுகிறது; ஸர்வத்ர—--எல்லா இடங்களிலும்; அவஸ்திதஹ---அமைந்துள்ள; தேஹே—--உடலில்; ததா--—அவ்வாறே; ஆத்மா---ஆன்மா; ந—இல்லை; உபலிப்யதே--—மாசுபடுகிறது
Translation
BG 13.33: விண்வெளி எல்லாவற்றையும் தன்னுள் வைத்திருக்கிறது, ஆனால் நுட்பமாக இருப்பதால், அவ்வாறு வைத்திருப்பதனால் மாசுபடுவதில்லை. அதுபோலவே, ஆத்மா முழு உடலிலும் உணர்வின் வடிவில் வியாபித்திருந்தாலும், உடலின் பண்புகளால் ஆன்மா பாதிக்கப்படுவதில்லை.
Commentary
தற்பெருமையால் உடலுடன் தன்னை அடையாளம் காணும் ஆன்மா தூக்கம் விழிப்பு சோர்வு புத்துணர்ச்சி மற்றும் பிற நிலைகளை அனுபவிக்கிறது. அது வசிக்கும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் ஆன்மாவை ஏன் பாதிக்கப்பதில்லை என்று ஒருவர் கேட்கலாம். ஸ்ரீ கிருஷ்ணர் அதை விண்வெளியின் உதாரணத்துடன் விளக்குகிறார். எல்லாவற்றையும் உள்ளடக்கிய விண்வெளி அவற்றால் பாதிக்கப்படுவதில்லை. ஏனென்றால் அது வைத்திருக்கும் மொத்தப் பொருட்களை விட நுட்பமானது. அதேபோல், உடலுடன் ஒப்பிடும்பொழுது ஆன்மா ஒரு நுட்பமான ஆற்றல்; பொருள் உடலுடன் அடையாளம் காணும் பொழுது கூட அது தெய்வீகத்தை தக்க வைத்துக் கொள்கிறது.