Bhagavad Gita: Chapter 13, Verse 19

இதி1 க்ஷேத்1ரம் த1தா2 ஞானம் ஞேயம் சோ1க்11ம் ஸமாஸத1: |

மத்34க்11 ஏத1த்3விஞ்ஞாய மத்3பா4வாயோப11த்3யதே1 ||19||

இதி--—இவ்வாறு; க்ஷேத்ரம்—--களத்தின் தன்மை; ததா--—மற்றும்; ஞானம்--—அறிவின் விளக்கம்; ஞேயம்--—அறிவின் பொருள்; ச—--மற்றும்; உக்தம்--—வெளிப்படுத்தப்பட்ட; ஸமாஸதஹ--—சுருக்கமாக; மத்-பக்தஹ—--என் பக்தர்கள்; ஏதத்--—இது; விஞ்ஞாய—--புரிதலுடன்; மத்-பாவாய---—என் தெய்வீக இயல்பை; உபபத்யதே---— அடைகிறார்கள்

Translation

BG 13.19: களத்தின் தன்மையையும், அறிவு என்பதன் விளக்கம், மற்றும் அறிவின் பொருளையும், இவ்வாறு நான் உங்களுக்கு வெளிப்படுத்தினேன். என் பக்தர்கள் மட்டுமே இதை உண்மையில் புரிந்து கொள்ள முடியும், அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் என் தெய்வீக தன்மையை அடைகிறார்கள்.

Commentary

இருப்பினும், மீண்டும் ஒருமுறை, அவர் பக்தியைக் கொண்டுவருவது பொருத்தமானதாகக் கருதுகிறார், மேலும் பக்தர்களால் (பக்தர்கள்) மட்டுமே இந்த அறிவை உண்மையாகப் புரிந்து கொள்ள முடியும் என்று கூறுகிறார்.

பகவத்கீதையின் முக்கியத்துவத்தை தாங்களாகவே புரிந்து கொண்டதாக நினைக்கும் கர்மம், ஞானம், அஷ்டாங்கம் போன்றவற்றை செய்பவர்களும் பக்தி இல்லாதவர்களும் பகவத்கீதையின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியாது. பக்தி என்பது கடவுளை அறியும் அனைத்து பாதைகளிலும் இன்றியமையாத ஆக்கக் கூறு. ஜகத்குரு ஸ்ரீ கிருபாலுஜி மஹராஜ் இதை மிக அருமையாகப் எடுத்துரைக்கிறார்:

ஜோ ஹரி ஸேவா ஹேது1 ஹோ, ஸோயீ க1ர்1ம ப3கா2ன்

ஜோ ஹரி ப43தி ப3டா4வே, ஸோயீ ஸமுஜிய ஞான

(ப4க்1தி1 ஶத1க்1 வசனம் 66)

‘கடவுள் பக்தியுடன் செய்யும் அந்த வேலையே உண்மையான கர்மம்; எந்த அறிவு கடவுளின் மீது அன்பை அதிகரிக்கிறதோ அதுவே உண்மையான அறிவு.'

பக்தி என்பது கடவுளை அறிய உதவுவது மட்டுமல்ல; இது பக்தர்களை தெய்வீகமாக ஆக்குகிறது, எனவே, பக்தர்கள் அவரது ஸ்வரூபத்தை அடைகிறார்கள் என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். இது வேத ஶாஸ்திரங்களில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. வேதங்கள் கூறுகின்றன:

4க்1தி1ரேவைனம் நயதி14க்1தி1ரேவைனம் ப1ஶ்யதி14க்1தி1ரேவைனம்

3ர்ஶயதி14க்1தி1 வஶஹ பு1ருஷோ ப4க்1தி1ரேவ க3ரீயஸி

(மாத1ர் ஸ்ருதி1)

‘பக்தி மட்டுமே நம்மை கடவுளிடம் அழைத்துச் செல்லும். பக்தி ஒன்றே நம்மை இறைவனைக் காண வைக்கும். பக்தி ஒன்றே நம்மை இறைவனின் முன்னிலையில் கொண்டுவர முடியும். கடவுள் பக்தியின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். எனவே, பக்தியை பிரத்தியேகமாகச் செய்யுங்கள்.’ முண்ட3கோ11நிஷத3ம் கூறுகிறது:

உபா1ஸதே1 பு1ருஷம் யே ஹ்யகா1மா-ஸ்தே1 ஶுக்1ரமேத13தி1வர்த1ந்தி1 தீ4ராஹா (3.2.1)

‘எல்லாப் பொருள் ஆசைகளையும் துறந்து, பரம தெய்வீகப் ஆளுமையை நோக்கி பக்தியில் ஈடுபடுபவர்கள், வாழ்வு மற்றும் மரணச் சுழற்சியிலிருந்து தப்பிக்கிறார்கள்.’ ஶ்வேதா1ஶ்வத1ர உப1நிஷத3ம் மேலும் கூறுகிறது:

யஸ்ய தே3வே ப1ரா ப4க்1தி1ர் யதா2 தே3வே த1தா2 கு3ரௌ

1ஸ்யைதே11தி1தா1 ஹ்யர்தா1ஹா ப்1ரகாஶந்தே1 மஹாத்1மனஹ (6.23)

‘கடவுள் மீது தளராத பக்தியும், குருவின் மீது அதே மாதிரியான பக்தியும் கொண்ட, அத்தகைய துறவிகளின் இதயங்களில், கடவுளின் அருளால், வேத ஶாஸ்திரங்களின் ஸாரம் தானாகவே வெளிப்படும்.’ மற்ற வேத நூல்களும் இதை வலியுறுத்துகின்றன:

ந ஸாத4யதி1 மாம் யோகோ3 ந ஸாங்க்2யம் த4ர்ம உத்34

ந ஸ்வாத்4யாயஸ் த1பஸ் தி1யாகோ3 யதா24க்1தி1ர் மமோர்ஜிதா1

(பா43வத1ம் 11.14.20)

ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்: ‘உத்தவ், நான் அஷ்டாங்க யோகத்தினாலும், ஸாங்கியத்தைப் படிப்பதினாலும், வேத அறிவை வளர்த்தினாலும், துறவறத்தினாலும், துறவினாலும் நான் அடைய படுவதில்லை. பக்தியால் மட்டுமே நான் வெல்ல படுகிறேன். பகவத் கீதையில், ஸ்ரீ கிருஷ்ணர் இதை 8.22 மற்றும் 11.54 வசனங்களில் மீண்டும் மீண்டும் கூறுகிறார். 18.55 வசனத்தில், அவர் கூறுகிறார்: ‘அன்புள்ள பக்தியின் மூலம்தான் சத்தியத்தில் நான் யார் என்பதை ஒருவர் அறிந்து கொள்ள முடியும். பின்னர், என்னை அறிந்ததும், என் பக்தன் என்னைப் பற்றிய முழு உணர்விற்குள் நுழைகிறான்.’ ராமாயணம் கூறுகிறது:

ராமஹி கே1வல ப்1ரேமு ப்1யாரா, ஜானி லேயு ஜோ ஜாநஹிஹாரா

'ஒப்புயர்வற்ற பகவான் ஸ்ரீ ராமர் அன்பின் மூலம் மட்டுமே அடையப்படுகிறார். இந்த உண்மையை அறிய விரும்பும் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.’.

இந்தக் கொள்கை மற்ற மத மரபுகளிலும் வலியுறுத்தப்படுகிறது. யூத தோராவில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: ‘உன் கடவுளாகிய ஆண்டவரை உன் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு வலிமையோடும் நேசிக்க வேண்டும்.’ (உபாகமம் 6.5). நாசரேத்தின் இயேசு இந்த கட்டளையை கிறிஸ்தவ புதிய ஏற்பாட்டில் பின்பற்ற வேண்டிய முதல் மற்றும் முதன்மையான கட்டளைகளில் ஒன்றாக மீண்டும் கூறுகிறார் (மார்க் 12.30). கு3ரு கி3ரந்த2 ஸாஹிப்3 கூறுகிறது:

ஹரி ஸம ஜக3 மஹ வஸ்து1 நஹிம், ப்1ரேம் ப1ந்1த்2 ஸோன் பந்த2

ஸத்3கு3ரு ஸம ஸஜ்ஜன் நஹி, கீ 3தா1 ஸம நஹி க்3ரந்த2

‘கடவுளைப் போன்ற ஆளுமை இல்லை; பக்தி மார்க்கத்திற்கு இணையான பாதை இல்லை; குருவுக்கு இணையான மனிதர் இல்லை; மேலும் கீதையுடன் ஒப்பிடக்கூடிய வேதம் எதுவும் இல்லை.’