Bhagavad Gita: Chapter 13, Verse 32

அனாதி3த்1வான்னிர்கு3ணத்1வாத்11ரமாத்1மாயமவ்யய: |

ஶரீரஸ்தோ2‌பி1 கௌ1ன்தே1ய ந க1ரோதி1 ந லிப்1யதே1 ||32||

அனாதித்வாத்—--ஆரம்பம் இல்லாமல் இருப்பது; நிர்குணத்வாத்--—எந்தவிதமான பொருள் குணங்கள் அற்ற; பரம--—உயர்ந்த; ஆத்மா—--ஆன்மா; அயம்--—இது; அவ்யயஹ----அழியாதது; ஶரீர-ஸ்தஹ—--உடலில் வசிப்பது; அபி--—எனினும்; கௌந்தேய--—குந்தியின் மகன் அர்ஜுனன்; ந--—இல்லை; கரோதி—--செய்கிறது; ந—-இல்லை; லிப்யதே--கறைபடுகிறது

Translation

BG 13.32: குந்தியின் மகனே, உன்னத ஆன்மா அழியாதது, ஆரம்பம் இல்லாதது, மற்றும் எந்த ஜட குணங்களும் அற்றது. உடலுக்குள் அமைந்திருந்தாலும், அது செயல்படவும் இல்லை, பொருள் ஆற்றலால் கறைபடவும் இல்லை.

Commentary

உயிர்களின் இதயத்தில் பரமாத்மாவாக அமைந்துள்ள கடவுள், உடலுடன் ஒருபொழுதும் அடையாளம் கண்டு கொள்வதில்லை, அதன் இருப்பு நிலைகளால் பாதிக்கப்படுவதில்லை. ஸ்தூல சரீரத்தில் அவருடைய இருப்பு அவரை எந்த வகையிலும் ஜடப்பொருள் சார்ந்தவராக ஆக்குவது இல்லை. எப்படியும் பொருளாக ஆக்குவதில்லை, அல்லது அவர் கர்மாவின் விதிக்கும் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சிக்கும் உட்படுவதில்லை, இருப்பினும் இவை ஆன்மாவால் அனுபவிக்கப்படுகின்றன.