Bhagavad Gita: Chapter 4, Verse 14

ந மாம் க1ர்மாணி லிம்ப1ன்தி1 ந மே க1ர்மப1லே ஸ்ப்1ருஹா |

இதி1 மாம் யோபி1ஜானாதி11ர்மபி4ர்ன ஸ ப3த்4யதே1 ||14||

ந-—இல்லை மாம்-—என்னை; கர்மாணி—-செயல்பாடுகள்; லிம்பந்தி—கறைபடும்;; ந--இல்லை; மே--—எனக்கு; கர்ம-பலே—-—செயல்களின் பலன்களில்; ஸ்ப்ரிஹா-—ஆசை; இதி——இவ்வாறு; மாம்——என்னை; யஹ——யார்; அபிஜானாதி——அறிந்த; கர்மபிஹி——செயல்களின் விளைவு; ந-—இல்லை ஸஹ——அந்த நபரை; பத்யதே—--- கட்டுப்படுத்தும் ந—இல்லை; (ந பத்யதே——கட்டுப்டுத்தாது)

Translation

BG 4.14: செயல்பாடுகள் என்னைக் களங்கப்படுத்தாது, செயலின் பலனை நான் விரும்புவதுமில்லை. இந்த வழியில் என்னை அறிந்தவன் வேலையின் கர்ம வினைகளுக்கு ஒருபோதும் கட்டுப்படுவதில்லை.

Commentary

கடவுள் எல்லாம் தூய்மையானவர், அவர் எதைச் செய்கிறாரோ அது தூய்மையாகவும் மங்களகரமானதாகவும் மாறும். ராமாயணம் கூறுகிறது:

ஸமரத21ஹுன் நஹின் தோ3ஷு கோ3சாயிந், ரபி 3 பா1வக ஸுரஸரி கீ நாயிந்

‘சூரியன், நெருப்பு, கங்கை போன்ற தூய்மையான ஆளுமைகள் மற்றும் பொருள்கள், அசுத்தங்களுடன் தொடர்பு கொண்டாலும் மாசுபடுவது இல்லை,’ சூரியனின் சூரிய ஒளி சிறுநீரின் மீது விழுவதால் சூரியன் மாசுபடுவது இல்லை. அதுபோலவே அழுக்கு குட்டையை சித்தரிக்கும் போது சூரியன் அதன் தூய்மையை தக்க வைத்துக் கொள்கிறது. மேலும்,அசுத்தமான பொருட்களை நா’ம் நெருப்பில் செலுத்தினால், அது அதன் தூய்மையைத் தக்க வைத்து கொள்கிறது - நெருப்பு தூய்மையானது, மேலும் அதில் நாம் எதை ஊற்றுகிறோமோ அதுவும் தூய்மைப்படுத்துகிறது. இதைப்போலவே, ஏராளமான மழைநீர் சாக்கடைகள் புனித கங்கையில் கலக்கிறது, ஆனால் இது கங்கையை ஒரு சாக்கடையாக மாற்றாது - கங்கை தூய்மையானது, மேலும் அது அந்த அழுக்கு வாய்க்கால்களை புனித கங்கையாக மாற்றுகிறது. அதேபோல், கடவுள் அவர் செய்யும் செயல்களால் கறைபடுவதில்லை.

செயல்பாடுகள் ஒருவரை கர்ம வினைகளில் பிணைக்கிறது, அவை முடிவுகளை அனுபவிக்கும் மனோபாவத்துடன் செய்யப்படுகின்றன. இருப்பினும், கடவுளின் செயல்கள் சுயநலத்தால் தூண்டப்படுவதில்லை; அவரது ஒவ்வொரு செயலும் ஆன்மாக்கள் மீதான இரக்கத்தால் இயக்கப்படுகிறது. எனவே, அவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உலகை ஆட்சி செய்தாலும், அனைத்து வகையான செயல்களில் ஈடுபட்டாலும், அவர் ஒருபோதும் எந்த எதிர்வினைகளாலும் கறைபடுவதில்லை. ஒப்புயர்வற்ற ஸ்ரீ கிருஷ்ணர் அவர் வேலையின் பலன்களுக்கு அப்பாற்பட்டவர் என்று இங்கே கூறுகிறார்.

கடவுள் உணர்வில் நிலைத்திருக்கும் மகான்கள் கூட ஜட சக்திக்கு அப்பாற்பட்டவர்களாக மாறுகிறார்கள். அவர்களுடைய செயல்கள் அனைத்தும் கடவுளின் மீதுள்ள அன்பில் செயல்படுவதால், அத்தகைய தூய உள்ளம் கொண்ட புனிதர்கள் வேலையின் பலன்களுக்கு கட்டுப்படுவதில்லை. ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது:

யத்1 பா131ங்க1ஜ ப1ராக3 நிஷேவ த்1ரிப்1தா1

யோக3 ப்1ரபா4வ விதூ4தா1கி2ல க1ர்ம ப3ந்தா4ஹா

ஸ்வைரம் ச1ரந்தி1 முனயோ’பி1 ந நஹ்யமாநாஸ்

1ஸ்யேச்12யாத்11 வபு1ஷஹ கு11 ஏவ ப3ந்த4ஹ (10.33.35)

‘கடவுளின் தாமரை பாதங்களின் தூசியை சேவிப்பதில் முழு திருப்தி அடைந்திருக்கும் கடவுளின் பக்தர்களை ஜடச் செயல்கள் ஒருபோதும் களங்கப்படுத்தாது. யோக சக்தியால் பலன் தரும் வினைகளின் அடிமைத்தனத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொண்ட அந்த ஞானிகளை ஜடச் செயல்கள் கறைப்படுத்துவதில்லை. அப்படியென்றால், தன் இனிய சித்தத்தின்படி தன் ஆழ்நிலை வடிவத்தை ஏற்கும் இறைவன் பந்தம் பற்றிய கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர் என்பதே உண்மை.

Watch Swamiji Explain This Verse