யத்3ருச்1சா2லாப4ஸந்து1ஷ்டோ1 த்3வன்த்3வாதீ1தோ1 விமத்1ஸர: |
ஸம: ஸித்3தா4வஸித்3தௌ4 ச1 க்1ருத்2வாபி1 ந நிப3த்4யதே1 ||22||
யத்ருச்சா—---தன்னிச்சையாக வரும்; லாப—--ஆதாயத்தில்; ஸந்துஷ்டஹ----திருப்தியுடைய; த்வந்த்வ--—இருமையை; அதீதஹ—--மீறியவராகவும்; விமத்ஸரஹ--—பொறாமை இல்லாதவராகவும்; ஸமஹ--—சமமாக பாவிப்பராகவும்; ஸித்தௌ—--வெற்றியிலும்; அஸித்தௌ—--தோல்வியிலும்; ச—--மற்றும்; க்ருத்வா--—செயல்பட்டாலும்; அபி--—கூட; ‘நா—ஒருபோதும்; நிபத்யதே—கட்டுப்பட்டிருக்கிறது
Translation
BG 4.22: பொறாமையிலிருந்து விடுபட்டு, தன்னிச்சையாக வரும் எந்த ஆதாயத்தில் திருப்தியுடையவருமாக, வாழ்க்கையின் இருமைகளுக்கு அப்பாற்பட்டவையாக வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலையில் இருப்பதால், எல்லாவிதமான செயல்களை செய்யும்போதும் அவர்கள் தங்கள் செயல்களுக்குக் கட்டுப்படுவதில்லை.
Commentary
ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போலவே, கடவுள் இந்த உலகத்தை இருமைகள் நிறைந்ததாகப் படைத்தார்--இரவும் பகலும், இனிப்பும் புளிப்பும், வெப்பமும் குளிரும், மழையும் வறட்சியும் இருக்கிறது. அழகான பூ இருக்கும் அதே ரோஜா புதரில் அசிங்கமான முள்ளும் இருக்கும். வாழ்க்கையும் அதன் இருமைகளின் பங்கைககொண்டுவருகிறது--- மகிழ்ச்சி மற்றும் துன்பம், வெற்றி மற்றும் தோல்வி, புகழ் மற்றும் இகழ். அயோத்தியாவின் அரசனாக முடிசூடப்படுவதற்கு முந்தைய நாள், ராமர் தனது தெய்வீக பொழுதுபோக்கிற்காக காட்டிற்கு நாடு கடத்தப்பட்டார்.
இவ்வுலகில் வாழும் போது, இருமைகளை நடுநிலையாக்கி நேர்மறையான அனுபவங்களை மட்டுமே பெறுவதை எதிர்பார்ப்பது சாத்தியமானது ஒன்று இல்லை. அப்படியானால், வாழ்க்கையில் வரும் இருமைகளை நாம் எவ்வாறு வெற்றிகரமாக சமாளிப்பது? இந்த இருமைகளை நம் முன்னேற்றத்தில் எடுத்துக்கொண்டு அவற்றிற்கு மேலாக உயரவும், எல்லா சூழ்நிலைகளிலும் சமமாக இருக்கவும் கற்றுக்கொள்வது ஒன்றே இதற்கு தீர்ப்பு. நம் செயல்களின் பலனைப் பற்றிய பற்றின்மையை வளர்த்துக் கொள்ளும்போது, முடிவுகளுக்காக ஏங்காமல் வாழ்க்கையில் நம் கடமையைச் செய்வதில் மட்டுமே இது நிகழ்கிறது. நாம் அவ்வாறு கடவுளின் மகிழ்ச்சிக்காக செயல்களை செய்யும் போது அந்த வேலைகளை நேர்மறையான மற்றும் எதிர்மறையான பலன்களை கடவுளின் விருப்பமாக பார்த்து இரண்டையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறோம்.