Bhagavad Gita: Chapter 4, Verse 20

த்1யக்1த்1வா க1ர்மப2லாஸங்க3ம் நித்1யத்1ருப்1தோ1 நிராஶ்ரய: |

1ர்மண்யபி4ப்1ரவ்ருத்1தோ1‌பி1 நைவ கி1ன்சி1த்11ரோதி1 ஸ: ||20||

த்யக்த்வா--—துறந்து; கர்ம- ஃபல-ஆஸங்கம்—--செயல்களின் பலன்களின் மீது பற்றை; நித்ய--—எப்போதும்; த்ருப்தஹ—--திருப்தியுடன்; நிராஶ்ரயஹ—--சார்பு இல்லாமல்; கர்மணி--—செயல்பாடுகளில்; அபிப்ரவ்ருத்தஹ--—ஈடுபட்டு; அபி--—இருந்தாலும்; ந—-இல்லை; ஏவ—--நிச்சயமாக; கிஞ்சித்--—எதையும்; கரோதி—--செய்பவராய் இருக்கும்; ஸஹ---அந்த நபர் ந—--இல்லை;

Translation

BG 4.20: இத்தகைய மக்கள், தங்கள் செயல்களின் பலன்களின் மீதான பற்றுதலைக் கைவிட்டு, எப்போதும் திருப்தியடைகிறார்கள். மற்றும் வெளிப்புற விஷயங்களைச் சார்ந்து இருக்க மாட்டார்கள். செயல்களில் ஈடுபட்டாலும், அவர்கள் எதையும் செய்வதில்லை.

Commentary

செயல்களை வெளிப்புற தோற்றத்தால் வகைப்படுத்த முடியாது. செயலற்ற தன்மை மற்றும் செயல் எது என்பதை மனதின் நிலையே தீர்மானிக்கிறது. ஞானம் பெற்றவர்களின் மனம் கடவுளில் லயிக்கப்படுகிறது. அவருடன் பக்தியுடன் இணைந்த முழு திருப்தியுடன், அவர்கள் கடவுளை தங்கள் ஒரே அடைக்கலமாக பார்க்கிறார்கள். மற்றும் எந்த வெளிப்புற ஆதரவையும் சார்ந்திருக்க மாட்டார்கள். இந்த மனநிலையில், அவர்களின் அனைத்து செயல்களும் அகர்ம் அல்லது செயலற்ற தன்மை என்று அழைக்கப்படுகின்றன.

இதை விளக்க புராணங்களில் ஒரு அழகான கதை உள்ளது:

பிருந்தாவனத்தில் கோபியர்கள் (மாடு மேய்க்கும் பெண்கள்) ஒருமுறை விரதம் இருந்தனர். நோன்பை முடிக்கும் சமயம் அவர்கள் ஒரு முனிவருக்கு உணவளிக்க வேண்டியிருந்தது. யமுனை நதியின் மறுகரையில் வசித்த உயர்ந்த துறவியான துர்வாஸ முனிவருக்கு உணவளிக்குமாறு ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களுக்கு அறிவுறுத்தினார். கோபியர்கள் ஒரு சுவையான விருந்து தயார் செய்துவிட்டு கிளம்பினர் ஆனால் அன்று நதி மிகவும் கொந்தளிப்பாக இருந்ததைக் கண்டார்கள், படகோட்டிகள் யாரும் நதியை கடக்கத் தயாராக இல்லை.

கோ3பி1யர்கள் ஒரு தீர்வுக்காக ஸ்ரீ கிருஷ்ணரிடம் திரும்பினர். அவர் கோபியர்களை யமுனா நதி இடம் ஸ்ரீ கிருஷ்ணர் அக2ண்ட3 (நித்திய) ப்3ரஹ்மசா1ரி என்றால் அது அவர்களுக்கு வழி கொடுக்க வேண்டும் என்று கூறச் சொன்னார். ஸ்ரீ கிருஷ்ணர் அகண்ட ப்ரஹ்மச்சாரியாக இருப்பதை சந்தேகித்து கோபியர்கள் சிரிக்கத் தொடங்கினர். இருப்பினும் ஸ்ரீ கிருஷ்ணர் ப்ரஹ்மசாரி என்றால் வழி கொடுக்க வேண்டும் நதியிடம் கூறியபோது நதி அவர்களுக்கு வழி கொடுத்தது அல்லாமல் ஆற்றின் நடுவில் அவர்கள் செல்வதற்கு மலர்களின் பாலம் வெளிப்பட்டது.

கோபியர்கள் வியந்தனர். அவர்கள் துர்வாஸ முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்று, அவருக்காகக் கொண்டு வந்த சுவையான உணவை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர். ஒரு துறவியாக இருந்ததால், அவர் ஒரு சிறிய பகுதியை மட்டுமே சாப்பிட்டார், இது கோபியர்களை ஏமாற்றியது. எனவே, துர்வாஸ முனிவர் அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடிவு செய்தார், மேலும் தனது மாய சக்தியைப் பயன்படுத்தி, அவர்கள் கொண்டு வந்த அனைத்தையும் சாப்பிட்டார். அவர் இவ்வளவு சாப்பிடுவதைக் கண்டு கோபியர்கள் ஆச்சரியப்பட்டார்கள், ஆனால் அவர் தங்கள் சமையலுக்கு நியாயம் செய்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

அவர், ‘இன்று துர்வாஸர் து3ப்3ப புல்லைத் தவிர (துர்வாஸர் உண்ணும் ஒருவகைப் புல்) எதையும் உண்ணவில்லை என்றால், நதி வழிவிட வேண்டும் என்று யமுனா நதிக்குச் சொல்லுங்கள்.'என்று கோபிகளிடம் கூறினார். துர்வாஸர் அனைத்து உணவையும் உட்கொண்டதை பார்த்த கோபியர் மீண்டும் சிரிக்கத் தொடங்கினர். ஆனால் அவர்கள் மிகவும் ஆச்சரியப்படும் வகையில் யமுனா நதியிடம் அவர்கள் மன்றாடியபோது நதி மீண்டும் அவர்களுக்கு வழி கொடுத்தது.

கோபியர்கள் ஸ்ரீ கிருஷ்ணரிடம் என்ன நடந்தது என்று கேட்டனர். கடவுளும் மஹான்களும் வெளிப்புறமாக ஜடச் செயல்களில் ஈடுபடுவதாகத் தோன்றினாலும், உள் வாரியாக அவர்கள் எப்பொழுதும் ஆழ்நிலையில் இருக்கிறார்கள் என்று அவர் விளக்கினார். இவ்வாறு, அனைத்து வகையான செயல்களைச் செய்தாலும், அவர்கள் இன்னும் செய்யாதவர்களாகவே கருதப்படுகிறார்கள். கோபி கோபியர்களுடன் வெளிப்புறமாக தொடர்பு கொண்டாலும், ஸ்ரீ கிருஷ்ணர் அகண்ட (நித்திய) ப்ரஹ்மச்சாரியாக இருந்தார். துர்வாஸர் கோபியர்கள் அளித்த சுவையான உணவை உண்டாலும், உள்ளத்தில் அவரது மனம் தூப்ப புல்லை மட்டுமே சுவைத்தது. இவை இரண்டும் செயலில் செயலற்ற தன்மையை எடுத்துக்காட்டுகின்றன.

Watch Swamiji Explain This Verse