Bhagavad Gita: Chapter 4, Verse 23

31ஸங்க3ஸ்ய முக்11ஸ்ய ஞானாவஸ்தி21சே11ஸ: |

யஞ்ஞாயாச1ரத1:க1ர்ம ஸமக்3ரம் ப்1ரவிலீயதே1 ||23||

கத-ஸங்கஸ்ய--—பொருள் இணைப்புகளிலிருந்து விடுபட்டவரின்; முக்தஸ்ய—--விடுவிக்கப்படுகிற; ஞான---அவஸ்தித--—தெய்வீக அறிவில் நிலைநிறுத்தப்பட்ட; சேதஸஹ-----புத்தியுடன்; யஞ்ஞாய—--ஒரு தியாகமாக (கடவுளுக்கு); ஆசரதஹ----நடத்தும்; கர்ம--—செயல்; ஸமக்ரம்—--முற்றிலும்; ப்ரவிலீயதே--—சுதந்திரமானவை.

Translation

BG 4.23: அவர்கள் பொருள் பற்றுகளின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். மற்றும், அவர்களின் புத்தி தெய்வீக அறிவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் எல்லா செயல்களையும் ஒரு தியாகமாக (கடவுளுக்கு) செய்வதால், அவர்கள் எல்லா கர்மவினைகளிலிருந்தும் விடுபடுகிறார்கள்.

Commentary

இந்த வசனத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் முந்தைய ஐந்து வசனங்களின் முடிவை சுருக்கமாக கூறுகிறார். நமது செயல்கள் அனைத்தையும் கடவுளுக்கு அர்ப்பணிப்பது ஆன்மா என்பது கடவுளின் நித்திய சேவகர் என்பதை புரிந்துகொள்வதன் விளைவாகும். சைதன்ய மஹாபிரபு கூறினார்: ஜீவேர ஸ்வரூப1 ஹய கி1ருஷ்ணேர நித்1ய-தா3ஸ (சை11ன்ய ச1ரிதா1ம்ருத், மத்4ய லீலா, 20.108). ‘இயல்பாகவே ஆன்மா இறைவனின் அடியவன்.’ இந்த அறிவில் நிலைபெற்றவர்கள் தங்கள் செயல்கள் அனைத்தையும் அவருக்கு ப்ரஸாதமாகச் செய்கிறார்கள். மற்றும், அவர்களின் செயல்களின் பாவ விளைவுகளிலிருந்து விடுபடுகிறார்கள்.

அத்தகைய ஆத்மாக்கள் எந்த வகையான பார்வையை உருவாக்குகிறார்கள்? இதை ஸ்ரீ கிருஷ்ணர் அடுத்த வசனத்தில் விளக்குகிறார்.

Watch Swamiji Explain This Verse