Bhagavad Gita: Chapter 4, Verse 41

யோக3ஸன்யஸ்த11ர்மாணம் ஞானஸம்சி1ந்னஸந்ஶயம் |

ஆத்1மவன்த1ம் ந க1ர்மாணி நிப3த்4னன்தி14னந்ஜய ||41||

யோக-ஸன்யஸ்த-கர்மாணம்--—சம்பிரதாய கர்மத்தை துறந்து, தங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மாவை கடவுளுக்கு அர்ப்பணிப்பவர்ககளை; ஞான---அறிவால்; ஸந்சின்ன—--அகற்றப்பட்டடு; ஸந்ஶயம்—--சந்தேகங்கள்; ஆத்ம-வந்தம்--—தன்னைப் பற்றிய அறிவில் நிலைபெற்று இருப்பவர்களை; ந--—இல்லை; கர்மாணி—--செயல்கள்; நிபத்நந்தி—--கட்டுப்படுத்துகிறது;; தனந்ஜய----அர்ஜுனன், செல்வத்தை வென்றவன்

Translation

BG 4.41: ஓ அர்ஜுனா, கர்மத்தை துறந்தவர்களையும், அறிவினால் சந்தேகங்கள் நீங்கியவர்களையும், சுய அறிவில் நிலைபெற்றவர்களையும் செயல்கள் பிணைப்பதில்லை.

Commentary

‘கர்மம்’ என்பது பரிந்துரைக்கப்பட்ட சடங்குகள் மற்றும் சமூகக் கடமைகளின்படி செயல்; ‘ஸன்யாஸ்’ என்றால் ‘துறப்பது’ என்றும், ‘யோக்’ என்றால் ‘கடவுளோடு ஒன்றுபடுவது’ என்றும் பொருள். இங்கே, ஸ்ரீ கிருஷ்ணர் யோகஸன்யஸ்த கர்மாணம் என்ற வார்த்தையை பயன்படுத்தினார், 'அனைத்து சடங்கு கர்மங்களையும் துறந்து, தங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மாவை கடவுளுக்கு அர்ப்பணிப்பவர்களை' குறிப்பிடுகிறார். அத்தகைய நபர்கள் தங்கள் ஒவ்வொரு செயலையும் கடவுளுக்குச் செய்யும் சேவையாகவே செய்கிறார்கள். அவர்கள் செய்யும் பக்தி அவர்களை பிணைக்காது என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.

ஒருவரின் சுயநலத்தை நிறைவேற்றுவதற்காக செய்யப்படும் செயல்கள் மட்டுமே ஒருவரை செயல்களின் செய்வினையில் பிணைக்கிறது. கடவுளின் மகிழ்ச்சிக்காக மட்டுமே வேலை செய்யும்போது, ​​அத்தகைய செயல் அனைத்து செயல் வினைகளிலிருந்தும் விடுபடுகிறது. இது 0 (பூஜ்ஜியம்) உடன் பெருக்குவது போன்றது. பூஜ்ஜியத்தை பத்தோடு பெருக்கினால், விளைவு பூஜ்ஜியமாக இருக்கும்; பூஜ்ஜியத்தை ஆயிரத்துடன் பெருக்கினால், விளைவு பூஜ்ஜியமாகவே இருக்கும்; பூஜ்ஜியத்தை ஒரு லட்சத்துடன் பெருக்கினால், பலன் இன்னும் பூஜ்ஜியமாக இருக்கும். அதேபோல், உலகில் ஞானம் பெற்ற ஆன்மாக்கள் செய்யும் செயல்கள் அவர்களை பிணைப்பதில்லை, ஏனெனில் அவை யோக நெருப்பில் கடவுளுக்கு வழங்கப்படுகின்றன, அதாவது அவை கடவுளுடைய மகிழ்ச்சிக்காக செய்யப்படுகின்றன. இவ்வாறு, எல்லா வகையான வேலைகளையும் செய்தாலும், துறவிகள் கர்ம பந்தங்களிலிருந்து தடையின்றி இருக்கிறார்கள்.

Watch Swamiji Explain This Verse