Bhagavad Gita: Chapter 4, Verse 29-30

அபா1னே ஜுஹ்வதி1 ப்1ராணம் ப்1ராணே‌பா1னம் த1தா21ரே |

ப்1ராணாபா1னக3தீ1 ருத்3த்4வா ப்1ராணாயாமப1ராயணா: ||29||

அப1ரே நியதா1ஹாரா: ப்1ராணான்ப்1ராணேஷு ஜுஹ்வதி1 |

ஸர்வே‌ப்1யேதே1 யஞ்ஞவிதோ3 யஞ்ஞக்ஷபி111ல்மஷா: ||30||

அபானே—--உள்வரும் மூச்சில்; ஜுஹ்வதி---அரப்பணிக்கிறார்; ப்ராணம்--—வெளியேறும் மூச்சை; ப்ராணே—வெளியேறும் மூச்சில்; அபானம்-—உள்வரும் மூச்சை; ததா-—மேலும்; அபரே—மற்றவர்கள்; ப்ராண—வெளியேறும் சுவாசத்தின்; அபான—--மற்றும் உள்வரும் மூச்சு; கதீ—--இயக்கம்; ருத்வா—--தடுத்து; ப்ராண-ஆயாம—--மூச்சைக் கட்டுப்பபடுத்துவதின் மூலம்; பராயணாஹா-—-முழு அர்ப்பணிப்பை அளி்கின்றனர்; அபரே--—மற்றவர்கள்; நியத----—கட்டுப்படுத்தி; ஆஹாராஹா—--உணவு உட்கொள்ளலை; ப்ராணான்--—உயிர்-மூச்சுகளை; ப்ராணேஷு—--உயிர்-ஆற்றலில்; ஜுஹ்வதி--—தியாகம்; ஸர்வே---அனைவரும்; அபி—--மேலும்; ஏதே--—இவர்கள்; யஞ்ஞ-விதாஹா--—யாகங்களை அறிந்தவர்கள்; யஞ்ஞ-க்ஷபிதா—---யாகங்கள் செய்த விளைவால் சுத்தப்படுத்தப்பட்டவர்கள்; கல்மஷாஹ—--அசுத்தங்களிலிருந்து

Translation

BG 4.29-30: இன்னும் சிலர் உள்வரும் மூச்சில் வெளியேறும் மூச்சை தியாகம் செய்கிறார்கள், சிலர் உள்வரும் மூச்சை வெளிச்செல்லும் சுவாசத்தில் வழங்குகிறார்கள். சிலர் ப்ரணாயாமத்தை கடினமாகப் பயிற்சி செய்கிறார்கள், உயிர்-ஆற்றலின் ஒழுங்குமுறையில் முழுமையாக உள்வாங்கப்பட்டு உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் சுவாசங்களைக் கட்டுப்படுத்துகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் உணவை உட்கொள்வதைக் குறைத்து, உயிர்-சக்தியில் மூச்சை தியாகமாக வழங்குகிறார்கள். இந்த தியாகத்தை அறிந்தவர்கள் அனைவரும் இத்தகைய நிகழ்ச்சிகளின் விளைவாக தங்கள் அசுத்தங்களிலிருந்து தூய்மையடைந்தவர்கள்.

Commentary

சில நபர்கள் பிராணயாமத்தின் பயிற்சிக்கு ஈர்க்கப்படுகிறார்கள், இது 'மூச்சுக் கட்டுப்பாடு' என்று தளர்வாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதில் உள்ளடங்கும்:

பூ1ரக1ம்: நுரையீரலுக்குள் சுவாசத்தை இழுக்கும் செயல்முறை.

ரேசக1ம்: சுவாசத்தின் நுரையீரலை காலியாக்கும் செயல்முறை.

அந்த1ர் கு1ம்ப41ம்: உள்ளிழுத்த பிறகு சுவாசத்தை நுரையீரலில் வைத்திருத்தல். தற்காலிக இடைநீக்கத்தின் போது உள்வரும் சுவாசத்தில் வெளியேறும் சுவாசம் இடைநிறுத்தப்படுகிறது.

பா3ஹ்ய கு1ம்ப41ம்: சுவாசித்த பிறகு நுரையீரலை காலியாக வைத்திருத்தல். தற்காலிக இடைநீக்கத்தின் போது வெளிவரும் சுவாசத்தில் உள்வரும் சுவாசம் இடைநிறுத்தப்படுகிறது.

இரண்டு கும்பங்களும் மேம்பட்ட நுட்பங்கள் மற்றும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் மேற்பார்வையின் கீழ் மட்டுமே பயிற்சி செய்யப்பட வேண்டும், இல்லையெனில் அவை தீங்கு விளைவிக்கும். ப்ரணாயாம பயிற்சியில் நாட்டம் கொண்ட யோகிகள் புலன்களை கட்டுப்படுத்தவும், மனதை ஒருமுகப்படுத்தவும் உதவும் மூச்சுக் கட்டுப்பாட்டு செயல்முறையை மேற்கொள்கின்றனர். பின்னர் அவர்கள் கட்டுப்படுத்தப்பட்ட மனதை யஞ்ஞமாக ஒப்புயர்வற்ற கடவுளுக்கு வழங்குகிறார்கள்.

ப்ராணம் என்பது உண்மையில் மூச்சு அல்ல இது சுவாசம் மற்றும் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களின் வகைகளில் ஊடுருவி நிற்கும் நுட்பமான உயிர்சக்தி. வேத நூல்கள் பல்வேறு உடலியல் உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த உதவும் உடலில் உள்ள ஐந்து வகையான ப்ராணங்களை விவரிக்கின்றன- ப்ராணம், அபானம், வ்யானம், ஸமானம், உதா3னம். இவற்றில், செரிமானத்தின் உடல் செயல்பாடுகளுக்கு ஸமானம் பொறுப்பு. சிலர் விரதத்தில் நாட்டம் கொண்டு இருக்கலாம். உணவு, பழக்கம் மற்றும் நடத்தையை பாதிக்கிறது என்ற அறிவுடன் அவர்கள் உணவைக் குறைக்கிறார்கள். இத்தகைய உண்ணாவிரதம் பண்டைய காலங்களிலிருந்து இந்தியாவில் ஒரு ஆன்மீக நுட்பமாகப் பயன்படுத்தப்பட்டது, மேலும் இங்கு ஒரு யாகமாகவும் கருதப்படுகிறது. உணவைக் குறைக்கும்போது, ​​புலன்கள் வலுவிழந்து, ஜீரணத்திற்குக் காரணமான ஸமானம், தன்னைத்தானே நடுநிலையாக்கிக் கொள்கிறது. இதுதான் சிலர் செய்யும் யாகத்தின் இயல்பு.

இவை தூய்மைப்படுத்த படுவதற்காக செய்யப்படும் பல்வேறு வகையான துறவுகள். புலன்களையும் மனதையும் திருப்திப்படுத்துவதற்கான விருப்பமே இதயத்தை தூய்மை அற்றதாக மாற்றுகிறது. இந்த துறவறங்கள் அனைத்தின் நோக்கம், ஆன்மத்துறை சாராத ஜடப் பொருள்களில் இன்பம் தேடும் புலன்கள் மற்றும் மனதின் இயல்பான போக்கைக் குறைப்பதாகும். இந்த துறவறங்கள் ஒப்புயர்வற்ற பகவானுக்கு தியாகமாக செய்யும்பொழுது, ​​அவை இதயத்தின் தூய்மைக்கு காரணமாகின்றன (மனம் மற்றும் புத்தியின் உள் இயந்திரத்தைக் குறிக்க 'இதயம்' என்ற வார்த்தை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.).

Watch Swamiji Explain This Verse