Bhagavad Gita: Chapter 11, Verse 28-29

யதா2 நதீ3னாம் ப3ஹவோ‌ம்பு3வேகா3: ஸமுத்3ரமேவாபி4முகா2 த்3ரவந்தி1 |
1தா21வாமீ நரலோக1வீரா விஶன்தி1 வக்1த்1ராண்யபி4விஜ்வலந்தி1 ||28||
யதா2 ப்1ரதீ3ப்த1ம் ஜ்வலனம் ப11ங்கா3 விஶன்தி1 நாஶாய ஸம்ருத்34வேகா3:|

1தை2வ நாஶாய விஶன்தி1 லோகா1 ஸ்த1வாபி வக்1த்ராணி ஸம்ருத்34வேகா3:||29||

யதா—--எவ்வாறு; நதீநாம்—--நதிகளின்; பஹவஹ----பல; அம்பு—வேகாஹா---நீர் அலைகள்; ஸமுத்திரம்—--கடலை; ஏவ--—உண்மையில்; அபிமுகாஹா—--நோக்கி; த்ரவந்தி---விரைவாக பாயுமோ; ததா—--அதேபோல்; தவ—--உங்கள்; அமீ—--இவர்கள்; நர-லோக-வீராஹா—--மனித சமுதாயத்தின் அரசர்கள்; விஶந்தி--—நுழைகிறார்கள்; வக்த்ராணி—--வாய்களில்; அபிவிஜ்வலந்தி--—ஜுவாலையாய் எரியும்;யதா----எவ்வாறு; பிரதீப்தம்—---தீவிரமாக எரியும்; ஜ்வலனம்--—நெருப்பில்; பதங்காஹா--—அந்துப்பூச்சிகள்; விஶந்தி—--நுழைகின்றன; நாஶாய--—அழிந்து போவதற்கு; ஸம்ரித்த வேகஹ—--வெகுவேகமாக; ததா ஏவ—--அவ்வாறே; நாஶாய--—அழிந்து போவதற்காக; விஶந்தி--—நுழைகின்றனர்; லோகாஹா—--இந்த மக்கள்; தவ--—உங்கள்; அபி--—மேலும்;வக்த்ராணி--—வாய்களில்; ஸம்ருத்த-வேகாஹா----வெகுவேகமாக

Translation

BG 11.28-29: எத்தனையோ நதிகளின் அலைகள் கடலில் வேகமாகப் பாய்வது போல, இந்தப் பெரிய போர்வீரர்கள் அனைவரும் உமது வாயில் நுழைகிறார்கள். அந்துப்பூச்சிகள் அழிந்துபோவதற்காக அக்கினியில் பெரும் வேகத்தில் விரைவதைப் போல, இந்தப் படைகள் அனைத்தும் உமது வாய்களுக்குள் பெரும் வேகத்துடன் நுழைகின்றன.

Commentary

போர்க்களத்தில் தங்கள் கடமையைச் செய்து தங்கள் இன்னுயிரை ஈந்த பல உன்னத மன்னர்களும் போர்வீரர்களும் இருந்தனர். அர்ஜுனன் அவர்களை விருப்பத்துடன் கடலில் கலக்கும் நதி அலைகளுடன் ஒப்பிடுகிறார். பேராசை மற்றும் சுயநலத்தால் போராடிய பலர் இருந்தனர். அர்ஜுனன் அவர்களை அறியாமையால் எரியும் நெருப்புக்குள் இழுக்கப்படும் அந்துப்பூச்சிகளுடன் ஒப்பிடுகிறார். ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களிலும், அவர்கள் தங்கள் உடனடி மரணத்தை நோக்கி வேகமாக முன்னேறுகின்றனர்.