Bhagavad Gita: Chapter 11, Verse 5

ஶ்ரீப43வானுவாச1 |

1ஶ்ய மே பா1ர்த2 ரூபா1ணி ஶத1ஶோத2 ஸஹஸ்ரஶ: |

நானாவிதா4னி தி3வ்யானி நானாவர்ணாக்1ருதீ1னி ச1 ||5||

ஶ்ரீ-பகவான் உவாச—--ஒப்புயர்வற்ற பகவான் கூறினார்; பஶ்ய--—இதோ காண்பாயாக; மே--—என்;பார்த--—ப்ரிதாவின் மகன் அர்ஜுனன்; ரூபாணி—--வடிவங்களை; ஶதஶஹ--—நூற்றுக்கணக்கான; அத--—மற்றும்; ஸஹஸ்ரஶஹ--—ஆயிரக்கணக்கான; நானா-விதானி--—வெவ்வேறு; திவ்யானி—--தெய்வீக; நானா---பல்வேறு; வர்ண—--நிறங்களிலும்; ஆக்ருதீனி—--வடிவங்களிலும்; ச—மற்றும்

Translation

BG 11.5: ஒப்புயர்வற்ற கடவுள் கூறினார் - ஓ பார்த்தா! இப்பொழுது நீ என்னுடைய நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான அற்புதமான தெய்வீக வடிவங்களை வெவ்வேறு அளவுகளிலும் பல வண்ண வடிவங்களிலும் காண்பாயாக.

Commentary

அர்ஜுனனின் பிரார்த்தனைகளைக் கேட்ட பிறகு, ஸ்ரீ கிருஷ்ணர் தனது விஸ்வரூபம் அல்லது ப்ரபஞ்ச வடிவத்தின் தரிசனத்தைப் பெறும்படி அர்ஜுனனை கேட்கிறார். அர்ஜுனன் கவனம் செலுத்த வேண்டும் என்பதைக் குறிக்க அவர் இதோ என்று பொருள்படும் ப1ஶ்ய என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். வடிவம் ஒன்றுதான் என்றாலும், அது வரம்பற்ற அம்சங்களைக் கொண்டுள்ளது, மேலும் பல வடிவங்கள் மற்றும் வண்ணமயமான வண்ணங்களின் எண்ணற்ற ஆளுமைகளைக் கொண்டுள்ளது. ஸ்ரீ கிருஷ்ணர் அவர்கள் எண்ணற்ற அமைப்புமுறை மற்றும் பல வழிகளில் இருப்பதைக் குறிக்க ஶத1ஶோ த2 ஸஹஸ்ரஶஹ என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறார்.

எல்லையற்ற வடிவங்கள் மற்றும் வண்ணங்கள் கொண்ட அவரது ப்ரபஞ்ச வடிவத்தைக் காணும்படி அர்ஜுனனிடம் கேட்டுக்கொண்ட ஸ்ரீ கிருஷ்ணர், இப்பொழுது அந்த ப்ரபஞ்ச வடிவில் உள்ள தேவலோக தெய்வங்களையும் மற்ற அதிசயங்களையும் பார்க்கும்படி அர்ஜுனிடம் கேட்கிறார்.