Bhagavad Gita: Chapter 2, Verse 45

த்1ரைகு3ண்யவிஷயா வேதா3 நிஸ்த்1ரைகு3ண்யோ ப4வார்ஜுன |

நிர்த்3வன்த்3வோ நித்1யஸத்11வஸ்தோ2 நிர்யோக3க்ஷேம ஆத்1மவான் ||45||

த்ரைகுண்ய—--ஜட இயற்கையின் மூன்று முறைகள்; விஷயாஹா—-- பொருள்; வேதாஹா—--வேத நூல்கள்; நிஸ்த்ரைகுண்யோ—--பொருள் இயற்கையின் 3 முறைகளுக்கு அப்பாற்பட்ட ஆழ்நிலை; பவ—--இரு; அர்ஜுன--—அர்ஜுனா;  நிர்த்வன்த்வஹ—--இருமைகளிலிருந்து விடுபட்டு; நித்ய-ஸத்தவ-ஸ்தஹ--—நித்தியமாக சத்தியத்தில் நிலைத்திருந்து; நிர்யோகக்ஷேமஹ—--ஆதாயம் மற்றும் பாதுகாப்பைப் பற்றி அக்கறையற்று; ஆத்மவான்—--சுயத்தில் நிலைத்திரு

Translation

BG 2.45: வேதங்கள் ஜட இயற்கையின் மூன்று முறைகளைக் கையாள்கின்றன. ஓ அர்ஜுனா, இந்த மூன்று முறைகளில் இருந்து தூய ஆன்மிக உணர்வு நிலைக்கு உயரவும். இருமைகளிலிருந்து உன்னை விடுவித்து, நித்தியமாக சத்தியத்தில் நிலைத்திருந்து, பொருள் ஆதாயம் மற்றும் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படாமல், சுயத்தில் நிலைத்திரு.

Commentary

பொருள் ஆற்றல் தெய்வீக ஆன்மாவை அதன் மூன்று கூறு முறைகளால் வாழ்க்கையின் உடல் கருத்தாக்கத்துடன் பிணைக்கிறது. ஜட இயற்கையின் இந்த முறைகள் ஸத்வ (நன்மையின் முறை), ரஜஸ் (ஆர்வத்தின் முறை) மற்றும் தமஸ் (அறியாமையின் முறை) ஆகும். மூன்று முறைகளின் ஒப்பீட்டு விகிதம் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும், எண்ணற்ற கடந்தகால வாழ்க்கையிலிருந்து அவர்களின் ஸ்ம்ஸ்காரங்ககளுக்கு (சுபாவங்கள்) ஏற்ப, ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விருப்பங்களும் சுபாவங்களும் உள்ளன.

வேத ஶாஸ்திரங்கள் இந்த ஏற்றத்தாழ்வை ஏற்று அனைத்து வகையான மக்களுக்கும் தகுந்த அறிவுரைகளை வழங்குகின்றன. உலக எண்ணம் கொண்டவர்களுக்கான அறிவுரைகள் ஶாஸ்திரங்களில் இல்லை என்றால், அவர்கள் மேலும் வழிதவறிச் சென்றிருப்பார்கள். எனவே, வேதங்கள் அவர்களுக்கு கடுமையான சடங்குகளை நிறைவேற்றுவதற்கான பொருள் வெகுமதிகளை வழங்கி, அவர்கள் அறியாமை முறையிலிருந்து ஆர்வம் மற்றும் நன்மைமுறைகளுக்கு உயர உதவுகின்றன.

இவ்வாறு, வேதங்கள் இரண்டு வகையான அறிவைக் கொண்டிருக்கின்றன - பொருள் சம்பந்தமாக இணைக்கப்பட்டவர்களுக்கு சடங்குகள் மற்றும் ஆன்மீக ஆர்வலர்களுக்கு தெய்வீக அறிவு. ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனிடம் வேதங்களை நிராகரிக்கச் கூறியபொழுது, ​​முந்தைய மற்றும் பின்வரும் வசனங்களின் பின்னணியில் அந்த அறிக்கையை புரிந்து கொள்ள வேண்டும். பொருள் வெகுமதிகளுக்கான விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் சடங்குகளை முன்வைக்கும் வேதங்களின் பகுதியால் அர்ஜுனன் ஈர்க்கப்படக்கூடாது என்று அவர் மறைமுகமாக கூறுகிறார். மாறாக, அவர் தன்னை முழுமையான உண்மை நிலைக்கு உயர்த்திக் கொள்ள வேத அறிவின் தெய்வீகப் பகுதியை பயன்படுத்த வேண்டும் என்று உரைக்கிறார்.

Watch Swamiji Explain This Verse