ஆபூ1ர்யமாணமச1லப்1ரதி1ஷ்டம்
ஸமுத்3ரமாப1: ப்1ரவிஶன்தி1 யத்3வத்1 |
த1த்3வத்1கா1மா யம் ப்1ரவிஶன்தி1 ஸர்வே
ஸ ஶான்தி1மாப்1னோதி1 ந கா1மகா1மீ ||70||
ஆபூர்யமாணம்—--எல்லா பக்கங்களிலிருந்தும் நிரப்பப்பட்ட; அசல-ப்ரதிஷ்டம்---கலங்காமல்; ஸமுத்ரம்--- கடல்; ஆபஹ----நீரோட்டம்; ப்ரவிஶன்தி----பிரவேசிக்கும்; யத்வத்---எவ்வாறோ தத்வத்---அவ்வாறே; காமாஹா--- ஆசைகள்; யம்----எவரை ப்ரவிஶன்தி----பிரவேசிக்கும்; ஸர்வே---அனைத்து; ஸஹ----அந்த நபர்; ஶாந்திம்--- அமைதியை; ஆப்னோதி---அடைகிறார்; ந-—இல்லை காம-காமீ---ஆசைகளை பூர்த்தி செய்ய முயல்பவர்
Translation
BG 2.70: நதிகளில் இருந்து வரும் நீரின் இடைவிடாத நீரோட்டத்தால் கடல் கலங்காமல் இருப்பது போல, தன்னைச் சுற்றி விரும்பத்தக்க பொருள்கள் இருந்தாலும் ஆசைகளைத் திருப்திப்படுத்த முயற்சி செய்யாமல் அவைகளால் பாதிக்கப்படாமல் இருக்கும் முனிவர் அமைதியை அடைகிறார்.
Commentary
ஆறுகள் விடாது கடலில் கலந்த வண்ணம் இருந்தபோதிலும் கடல் அதன் அமைதியான நிலையை தக்கவைத்துக் கொள்கிறது அது கடலின் தனித்துவமானது. உலகின் அனைத்து நதிகளும் தொடர்ந்து பெருங்கடல்களில் தங்களைக் காலியாக்கிக் கொள்கின்றன, அவை நிரம்பி வழிவதும் இல்லை, குறைவதும் இல்லை. ஸ்ரீ கிருஷ்ணர் எல்லாப் பக்கங்களிலிருந்தும் நிரம்பியது (ஆபூர்யமாணம்) என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார், மழைக்காலத்தில் நதிகள் தங்கள் முழு நீரையும் கடலில் காலியாக்கி கொண்டாலும் கடலல் நிரம்பி வழிவது இல்லை, அதேபோல, உடல் தேவைகளுக்காக புலன் பொருள்களைப் பயன்படுத்தும் போது அல்லது இழக்கும் போதும். உணர்ந்த முனிவர் இரு நிலைகளிலும் அமைதியாகவும், அசையாதவராகவும் இருக்கிறார்-அத்தகைய முனிவர் மட்டுமே ஶாந்தி அல்லது உண்மையான அமைதியை அடைய முடியும்.