க்1ரோதா4த்1ப4வதி1 ஸம்மோஹ: ஸம்மோஹாத்1ஸ்ம்ருதி1விப்4ரம: |
ஸ்ம்ருதி1ப்4ரன்ஶாத்1பு3த்3தி4னாஶோ பு3த்3தி4நாஶாத்1ப்1ரணஶ்யதி1 ||63||
க்ரோதாத்—-கோபத்திலிருந்து;ஸம்மோஹஹ---தீர்ப்பின் மேகம்; பவதி -ஸம்மோஹஹ—--பகுத்தறிவு மங்குகிறது; ஸம்மோஹாத்—--மங்கிய பகுத்தறிவினால்; ஸ்ம்ருதி—--நினைவுத் திறன்; விப்ரமஹ—- குழப்பமடைகிறது; ஸ்ம்ருதி-ப்ரன்ஶாத்—-- நினைவாற்றலின் குழப்பத்திலிருந்து; புத்தி-நானாஶாத்----புத்தியின் அழிவினால்; ப்ரணஶ்யதி--—ஒருவன் பாழாகிறான்
Translation
BG 2.63: கோபம் பகுத்தறிவின் மேகமூட்டத்திற்கு வழிவகுக்கிறது, இதன் விளைவாக நினைவுத் திறன் குழப்பமடைகிறது. நினைவாற்றல் குழப்பமடையும் போது, புத்தி அழிந்துவிடும்; மற்றும் புத்தி அழிந்தால், ஒருவன் பாழாகிறான்.
Commentary
காலை மூடுபனி சூரிய ஒளியில் ஒரு மங்கலான மூடியை உருவாக்குவது போல, கோபம் தீர்ப்பு உணர்வை பாதிக்கிறது. அறிவு, உணர்ச்சிகளின் மூடுபனியால் மங்கி விடுவதனால், கோபத்தில் மக்கள் தவறுகளை செய்து பின்னர் வருந்துகிறார்கள். மக்கள், ‘அவர் எனக்கு இருபது வயது மூத்தவர். நான் ஏன் அவரிடம் இப்படிப் பேசினேன்? எனக்கு என்ன ஆயிற்று?’ கோபத்தால் மங்கிய தீர்ப்பு உணர்வின் காரணத்தினால் ஒரு பெரியவரை திட்டிய தவறு நேர்ந்தது.
புத்தி மங்கும்போது, அது நினைவாற்றலின் குழப்பத்திற்கு வழிவகுக்கிறது. ஒரு நபர் பின்னர் எது சரி எது தவறு என்பதை மறந்துவிட்டு உணர்ச்சிகளின் எழுச்சியால் உந்தப் படுகிறார். அங்கிருந்து இழிவு நிலை நோக்கிச் செல்வது தொடர்கிறது, மேலும் நினைவாற்றலின் குழப்பம் புத்தியின் அழிவை விளைவிக்கிறது. புத்தி என்பது அக வழிகாட்டியாக இருப்பதால், அது அழிந்தால், ஒருவன் பாழாகிறான். இவ்வாறே, தெய்வீகத்திலிருந்து துரோகத்திற்கு இறங்கும் பாதை, கருத்துப் பொருள்கள் பற்றிய சிந்தனைகள் தொடங்கி அறிவாற்றலின் அழிவுவரை தொடர்கிறது என்று விவரிக்கப்பட்டுள்ளது.