Bhagavad Gita: Chapter 2, Verse 2

ஶ்ரீ ப43வானுவாச1 |
கு11ஸ்த்1வா க1ஶ்மலமித3ம் விஷமே ஸமுப1ஸ்தி21ம் |

அனார்யஜுஷ்ட1மஸ்வர்க்3யமகீ1ர்திக1ரமர்ஜுன ||2||

ஶ்ரீபகவானுவாச---ஒப்புயர்வற்ற பகவான் கூறினார்; குதஹ-—-எவ்விடமிருந்து; த்வா-—-உன்னிடம்; கஶ்மல— மாயை; இதம்-—-இந்த;  விஷமே-—-இக்கட்டான நேரத்தில்;  ஸமுபஸ்திதம்-—-வென்றது;  அனார்ய-—- மெருகற்ற;  ஜுஷ்டம்-—-நடைமுறை;  அஸ்வர்க்யம்-—-உயர்ந்த இடங்களுக்கு செல்லாதது;  அகீர்திகரம்--- அவமானத்திற்கு வழிவகுக்கின்ற;  அர்ஜுன-—-அர்ஜுனா

Translation

BG 2.2: ஒப்புயர்வற்ற பகவான் கூறினார் என் அன்பான அர்ஜுனா, இன்னலுக்கு உட்பட்ட இந்த நேரத்தில் இந்த மாயை உன்னை எப்படி வென்றது? இது ஒரு மரியாதைக்குரிய நபருக்கு பொருந்தாது. உயர்ந்த இடங்களுக்கு அல்லாமல் இது அவமானத்திற்கு வழிவகுக்கிறது.

Commentary

நமது புனித நூல்களில் ஆர்ய என்ற சொல் எந்த இனத்தையோ அல்லது எந்த இனக்குழு- வையோ குறிக்கவில்லை. மனு ஸ்மிருதி ஒரு ஆரியரை மிகவும் தெளிந்த மற்றும் பண்பட்ட நபர் என்று வரையறுக்கிறது. 'ஆர்யன்' என்பது ' பண்பட்டமனிதர்' என்ற சொல்லைப் போலவே நன்மையைக் குறிக்கிறது. மனிதர்களை எல்லா வகையிலும் ஆரியர்களாக ஆக்கத் தூண்டுவதே வேத சாஸ்திரங்களின் நோக்கமாகும். ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனின் தற்போதைய நிலையை அந்த இலட்சியத்துடன் முரண்படுவதைக் கண்டறிந்து, அவரின் குழப்பத்தை கவனத்திற்கு கொண்டுவந்து எவ்வாறு அவரது தற்போது மனநிலையில் இந்த லட்சிய நிலைக்கு ஒத்து வாழ்வது என்று கடிந்து கொள்கிறார்.

பகவத் கீதை அல்லது ‘கடவுளின் பாடல்’ திறம்பட இங்கிருந்து துவங்குகிறது, ஏனெனில் இதுவரை அமைதியாக இருந்த ஸ்ரீ கிருஷ்ணர் பேசத் துவங்குகிறார். ஒப்புயர்வற்ற ஸ்ரீ கிருஷ்ணர் முதலில் அர்ஜுனனிடம் அறிவுப் பசியை தூண்டுவதன் மூலம் தொடங்குகிறார். பின்னர் வலி, அவமானம், வாழ்க்கையில் தோல்வி மற்றும் ஆன்மாவின் சீரழிவு ஆகிய மாயையின் விளைவுகளை அவர் அர்ஜுனுக்கு நினைவூட்டுகிறார்,

ஸ்ரீ கிருஷ்ணர் அவரை ஆறுதல்படுத்துவதற்கு பதிலாக, அர்ஜுனனின் தற்போதைய நிலையைப் பற்றி சங்கடப்படுத்துகிறார். நாம் அனைவரும் குழப்பமடையும் போது சங்கடமாக உணர்கிறோம், ஏனென்றால் அது ஆன்மாவின் இயல்பான நிலை அல்ல. இந்த அதிருப்தி உணர்வு, சரியாகச் செலுத்தப்பட்டால், உண்மையான அறிவைத் தேடுவதற்கு ஒரு சக்திவாய்ந்த தூண்டுதலாக மாறும்.. சந்தேகத்தின் சரியான தீர்வு ஒரு நபரை முன்பை விட ஆழமான புரிதலை பெற உதவுகிறது. இவ்வாறு, கடவுள் சில சமயங்களில் வேண்டுமென்றே ஒரு நபரைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறார், அதனால் அவர் குழப்பத்தை தீர்ப்பதற்கு அறிவைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இறுதியாக சந்தேகம் தீர்க்கப்படும் பொழுது அந்த நபர் ஒரு உயர்ந்த உயர்ந்த புரிதலை அடைகிறார்.

Watch Swamiji Explain This Verse