Bhagavad Gita: Chapter 2, Verse 6

ந சை11த்1வித்3ம: க11ரன்னோ க3ரீயோ யத்3வா ஜயேம யதி3 வா னோ ஜயேயு: யானேவ ஹத்1வா ந ஜிஜீவிஷாம ஸ்‌தே1வஸ்தி2தா1: ப்1ரமுகே2 தா4ர்த1ராஷ்ட்1ரா: ||6||

ந—--இல்லை; ச--—மற்றும்; ஏதத்--—இது; வித்மஹ----நாம் அறிவோம்; கதரத்-—எந்த;  நஹ-—-நமக்கு;  கரீயஹ-—- விரும்பத்தக்கது;  யத்வா-—-எதுவாகினும்;  ஜயேம-—நாம் வெறற்றி பெறலாம்;  யத் வா-—அல்லது; நஹ-—-நம்மை;  ஜயேயுஹு----அவர்கள் வெற்றி அடையலாம்;  யான்-—யாரை; ஏவ-—நிச்சயமாக;  ஹத்வா----கொன்றபின்; ந-—இல்லை; ஜிஜீவிஷாமஹ--—நாம் வாழ விரும்புகிறோம்;  தே-—அவர்களே;  அவஸ்திதாஹா-—நிற்கின்றனர்; ப்ரமுகே-—நம்முன்; தார்தராஷ்ட்ராஹா-—த்ருதராஷ்டிரரின் மகன்கள்; (ந வித்மஹ-—நாம் அறியவில்லை)

Translation

BG 2.6: இந்தப் போரின் எந்த முடிவு நமக்குச் சிறந்தது என்று கூடத் தெரியாது-- அவர்களை வெல்வது அல்லது அவர்களால் வெற்றி பெறுவது. அவர்களைக் கொன்ற பிறகும் நாம் வாழ ஆசைப்பட மாட்டோம். ஆயினும் அவர்கள் த்ருதராஷ்டிரர் உடன் சேர்ந்து போராட, இப்பொழுது போர்க்களத்தில் நம் முன். நிற்கிறார்கள்.

Commentary

அர்ஜுனன் போரில் கௌரவர்களை தோற்கடிப்பது மற்றும் அவர்களால் தோற்கடிக்கப்படுவது ஆகிய இரண்டு விளைவுகளையும் விவாதித்துக் கொண்டிருந்தார். கௌரவர்களைக் கொன்று போரில் வெற்றி பெற்றால், அவருக்கு மேலும் வாழ ஆசை இருக்காது என்பதால், இரண்டு மாற்றுகளும் தோல்வியாகவே தோன்றின. இருப்பினும், பீஷ்மர், துரோணாச்சாரியர் மற்றும் கிருபாச்சாரியர் பிறருடன் சேர்ந்து நேர்மையற்ற கௌரவர்களின் பக்கம் இருந்து இழிவாகச் செயல்பட்டனர் என்பதே உண்மை. பழிபாவத்துக்கஞ்சாத துரியோதனன் பக்கம் சென்றதால், 'செல்வம் மற்றும் பதவியில் பற்றுதல்' என்று பொருள்படும் அர்த2கா1ம் என்ற சொல் அவர்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, போரில் அவர்களைக் கொல்வது இயற்கையான விளைவு. உண்மையில், போருக்குப் பிறகு, இழிவாகச் செயல்படும் ஆசிரியர் கைவிடப்படத் தகுதியானவர் என்று பீஷ்மரே ஒப்புக்கொண்டார்.

இங்கு பீஷ்மரை பற்றி சிறப்பாக குறிப்பிட வேண்டும். ஸ்ரீமத் பாகவதத்தின் (வசனம் 9.22.19) படி அவர் ஸ்ரீ கிருஷ்ணரின் சிறந்த பக்தர். தனது புலன்களை அடக்கி ஆண்ட அவர் வீரம் மற்றும் பரந்த மனப்பான்மையின் சின்னமாகத் திகழ்ந்தார். அவர் பரிபூர்ண உண்மையை உணர்ந்தவர். மேலும், எப்பொழுதும் உண்மையையே பேசுவதற்கான உறுதியை எடுத்தவர். மரணம்கூட அவர் மரணத்தை ஏற்றுக் கொள்ளும் பொழுதுதான் அவரை அணுக முடியும். பல காரணங்களுக்காக, பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பன்னிரண்டு பெரிய ஆளுமைகள் அல்லது மகாஜனங்களில் அவர் குறிப்பிடப்படுகிறார்:

ஸ்வயம்பூ4ர் நாரதா3ஹ ஶம்பூ4 ஹு கு1மாரஹ க1பி 1லோ மனுஹு

ப்1ரஹ்லாதோ 3 ஜனகோ1 பீ 4ஷ்மோ ப3லிர்வையாஸகி1ர்வயம் (6.3.20)

‘இந்த பன்னிரண்டு தலை சிறந்த அறிஞர்கள் பெரிய மதக் கொள்கைகளை அறிந்தவர்கள்-- முதன்முதலில் பிறந்த ப்ரஹ்மா, நாரதர், சிவபெருமான், நான்கு குமாரர்கள், பகவான் கபிலர் (தேவஹூதியின் மகன்), ஸ்வயம்புவ மனு, ப்ரஹலாத மஹராஜ், ஜனக மஹராஜ், தாத்தா பீஷ்மர், பலி மஹராஜ், ஸுகதேவ் முனி மற்றும் வேத வியாஸர்.

எனவே, பீஷ்மர் ஒரு ஞானம் பெற்ற ஆன்மாவாக இருந்தார், அவருடைய செயல்கள் தர்மத்தின் கொள்கைகளுக்கு எதிராக இருக்க முடியாது. இருப்பினும், அவரது ஆழ்ந்த நடத்தை ஆழமான தன்மை சாதாரண பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது. கௌரவர்களின் பக்கம் தான் போரிட்டாலும், போருக்கு முன் யுதிஷ்டிரரிடம் (மூத்த பாண்டவ சகோதரன்) 'அநீதியின் பக்கம் போரிட நான் கடமைப்பட்டுள்ளேன், ஆனால் நீ வெற்றிபெறும் வரத்தை உனக்கு தருகிறேன்' என்று கூறினார். பரமாத்மாவான ஸ்ரீ கிருஷ்ணரைத் தங்கள் பக்கம் வைத்திருந்த நீதியுள்ள பாண்டவர்கள் ஒருபோதும் தோற்க முடியாது என்பதை பீஷ்மர் அறிந்திருந்தார். அத4ர்மத்தின் (அநீதியின்) பக்கம் எடுத்துக்கொண்டு, வானத்திலும் பூமியிலும் உள்ள மிகப்பெரிய சக்திகளால் கூட இந்தப் புனிதப் போரில் வெல்ல முடியாது என்பதைக் காட்டினார். பகவான் கிருஷ்ணரின் தெய்வீக பொழுதுபோக்கிற்கு உதவுவதற்காக, அவர் தனது உயிரைக் கொடுக்கும் மிகப்பெரிய தியாகத்தைச் செய்தார்.

கௌரவர்களின் பக்கம் இருந்து போரிட்ட போதிலும் பீஷ்மரின் ஆழ்ந்த பக்தியை ஸ்ரீ கிருஷ்ணர் நன்கு அறிந்திருந்தார். அதனால் தான் தனது சொந்த சபதத்தை நிறைவேற்றாமல் பீஷ்மரின் சபதத்தை நிலைநாட்டினார். பீஷ்மர் போரின் பொழுது ஒரு குறிப்பிட்ட நாளில் அடுத்த நாள் சூரிய அஸ்தமனத்திற்கு முன், பாண்டவ வீரனான அர்ஜுனனைக் கொன்றுவிடுவேன், இல்லையேல் அவனைக் காப்பாற்ற, போரில் ஆயுதம் ஏந்தமாட்டேன் என்ற தனது சபதத்தை ஸ்ரீ கிருஷ்ணர் முறியடிக்க வேண்டும் என்று தீர்மானித்தார். மகாபாரதத்தின். பீஷ்மர் செய்த சபதத்தை கவிஞர்கள் விவரிக்கிறார்கள்:

ஆஜு ஜோ ஹரிஹின் ந ஶஸ்த்1ர க1ஹௌன்,

தௌ1 லாஜஹுன் க3ங்கா3 ஜனனீ கோ1 ஶாந்த1னு ஸுத1 ந க1ஹௌன்

(துறவி து1ள ஸீதா3ஸ்)

'ஒப்புயர்வற்ற பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நான் ஆயுதம் ஏந்த செய்யாவிட்டால், நான் என் தாய் கங்கையை அவமானப்படுத்துவேன், நான் சாந்தனு மன்னனின் மகன் அல்ல.’. பீஷ்மர் மிகவும் வீரத்துடன் போரிட்டதால், அர்ஜுனனின் தேர் நொறுங்கி, தரையில் சிக்கித் தவித்தார். அந்த நிலையில், ஸ்ரீ கிருஷ்ணர் தேர் சக்கரத்தைத் தூக்கிக்கொண்டு பீஷ்மர் அர்ஜுனைக் கொல்வதைத் தடுக்க முன் வந்தார். பீஷ்மர் கையில் தேர் சக்கரத்தை ஆயுதமாக ஏந்திய இறைவனைக் கண்டு புன்னகை பூத்தார். பக்தவத்சல பகவான் (தன் பக்தர்களுக்கு இன்பம் அளிக்கும் கடவுள்) தனது பக்தரின் வாக்கை நிறைவேற்றும் பொருட்டு தனது சபதத்தை தானே மீறிவிட்டார் என்பதை அவர் புரிந்து கொண்டார்.

உண்மையில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பீஷ்மரின் பக்திக்கு மிகவும் ரஸிக் (இனிமை நிறைந்த) சுவை இருந்தது. அவர் பிருந்தாவனத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் பொழுது போக்குகளை தியானித்து வந்தார். அங்கே மாலையில் காட்டில் மாடுகளை மேய்த்துவிட்டு பகவான் ஊர் திரும்பும் போது, ​​மாடுகளின் குளம்புகளிலிருந்து எழும் தூசுகள் அவரது வசீகர முகத்தை மூடி, அதன் அழகையும், வசீகரத்தையும் அதிகப்படுத்தும். மகாபாரதப் போரின் போது, ​​குதிரைகளின் குளம்புகளிலிருந்து எழுந்த தூசியும் ஸ்ரீ கிருஷ்ணரின் அழகைக் கூட்டியது, மேலும், அவர் தனது இறைவனை (தெய்வீக தரிசனம்) தரிசனம் செய்வதை விரும்பினார்.

அவரது வாழ்க்கையின் கடைசி கட்டத்தில், அவர் ஆறு மாதங்கள் அம்புப் படுக்கையில் படுத்திருந்தபோது, ​​அவர் கடவுளின் அந்த தரிசனத்தையே தியானித்தார், அவருக்கு பின்வரும் பிரார்த்தனைச் செய்தார்:

யுதி4 து1ரக3ராஜோ-விதூ4ம்ர-விஷ்வக்1-

11-லுலித1-ஶ்ரமவார்யலங்க்1ரு தா1ஸ்யே

மம நிஶித1-ஶரைர் விபி4த்3யமான-

த்1வசி1 விலச1த்1-க1வசே1 'ஸ்து1 க்1ருஷ்ண ஆத்1மா

(பாகவதம் 1.9.34)

‘போர்க்களத்தில், ஸ்ரீ கிருஷ்ண பகவானின் அலையாய் விழுகின்ற முடியானது குதிரைகளின் குளம்புகளால் எழுப்பப்பட்ட வெள்ளைத் தூசியால் மூடப்பட்டிருந்தது, தேர் ஓட்டுவதில் அவரது உடல் உழைப்பின் காரணமாக அவரது முகம் வியர்வை மணிகளால் மூடப்பட்டிருந்தது. இவை என் இறைவனின் அழகை மேம்படுத்தும் ஆபரணங்கள் போல இருந்தன; மேலும் , எனது கூர்மையான அம்புகளால் ஏற்பட்ட காயங்கள் அலங்காரங்களை மேலும் தீவிரப்படுத்தியது. அந்த ஸ்ரீ கிருஷ்ணரை என் மனம் தியானிக்கட்டும்.’

ஒப்புயர்வற்ற ஸ்ரீ கிருஷ்ணர் அம்புகளின் படுக்கையில் பீஷ்மரை சந்திக்க வருவதன் மூலம் பீஷ்மரின் அன்பான பக்தியை பரிவருத்தனை செய்தார், மேலும் அவரது கண்களுக்கு முன் பகவானின் தரிசனத்துடன், குரு வம்சத்தின் தலை சிறந்த மகானான பீஷ்மர் தனது சொந்த விருப்பப்படி தனது உடலை விட்டு வெளியேறினார்.

Watch Swamiji Explain This Verse