Bhagavad Gita: Chapter 2, Verse 8

ந ஹி ப்1ரப1ஶ்யாமி மமாப1நுத்3யாத்3 யச்1சோ21முச்1சோ2ஷணமின்த்3ரியாணாம் அவாப்1ய பூ4மாவஸப1த்னம்ருத்34ம் |

ராஜ்யம் ஸுராணாமபி1 சா1தி41த்1யம் ||8||

ந—இல்லை; ஹி—--நிச்சயமாக; ப்ரபஷ்யாமி—நான் பார்க்கிறேன்;; மம-—-என்னுடைய; அபநுத்யாத்-—ஓட்டி விடுவதால்; யத்---—எந்த; ஶோகம்-—-வேதனை; உச்சோஷணம்-—-உலர்வதை; இந்த்ரியாணாம்-உணர்வுகளின்; அவாப்ய-—-வென்றபிறகு; பூமௌ-—-பூமியில்; அஸபத்னம்-—-நிகரற்ற; ரித்தம்-—-வளமான;  ராஜ்யம்-—-ராஜ்யத்தை; ஸுராணாம்--—தேவலோக தெய்வங்களைப் போன்ற;  அபி----ஆதிபத்யம்-—இறையாண்மையை பெற்றாலும்;  ச--—மற்றும்; (ந-ப்ரபஶ்யாமி-— பார்க்க இயலவில்லை)

Translation

BG 2.8: இந்த வேதனையிலிருந்து என்னுடைய உணர்வுகளை பேணிக் காக்கவும் மற்றும் இந்த வேதனையை விரட்டவும் எந்த வழியயும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் பூமியில் வளமான மற்றும் நிகரற்ற ராஜ்யத்தை வென்றாலும் அல்லது தேவலோக தெய்வங்களைப் போன்ற இறையாண்மையை பெற்றாலும் இந்த துயரத்தை என்னால் அகற்ற முடியாது.

Commentary

நாம் துன்பத்தில் மூழ்கும் பொழுது, ​​​​புத்தி துன்பத்திற்கான காரணத்தை பகுப்பாய்வு செய்து கொண்டே இருக்கும். மேலும், சிந்திக்க முடியாதபோது, ​​​​மனச்சோர்வு ஏற்படுகிறது. அர்ஜுனனின் பலவீனமான அறிவுசார் திறன்களை விட அவரது பிரச்சினைகள் பெரிதாக இருப்பதால், அவரை துக்க கடலில் இருந்து மீட்க அவரது பொருள் அறிவு போதுமானதாக இல்லை. ஸ்ரீ கிருஷ்ணரை தனது குருவாக ஏற்றுக்கொண்ட அர்ஜுனன் இப்பொழுது தனது பரிதாபமான நிலையை அவரிடம் வெளிப்படுத்துகிறார்.

அர்ஜுனனின் நிலைமை தனித்துவமானது அல்ல. நாம் நமது வாழ்க்கைப் பயணத்தில் சில சமயங்களில் நம்மை இந்த சூழ்நிலையில் காண்கிறோம். நாம் மகிழ்ச்சியை விரும்புகிறோம் ஆனால் துன்பத்தை அனுபவிக்கிறோம்; நாம் அறிவை விரும்புகிறோம் ஆனால் அறியாமையின் பிடியிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள முடிவதில்லை. நாம் குறைபாடற்ற அன்புக்காக ஏங்குகிறோம். ஆனால், மீண்டும் மீண்டும் ஏமாற்றத்தை சந்திக்கிறோம். நமது கல்லூரிப் பட்டங்களும், முயன்று பெற்ற அறிவும், சாதாரணமான கல்வித்திறமும் வாழ்க்கையின் இந்தக் குழப்பங்களுக்குத் தீர்வைத் தருவதில்லை. வாழ்க்கையின் புதிரை தீர்க்க நமக்கு தெய்வீக அறிவு தேவை. உண்மையான ஆழ்நிலையில் உள்ள ஆசான் நமக்கு கிடைக்கப்பெற்று, அவரிடமிருந்து கற்றுக்கொள்ளும் பணிவு நமக்கு இருந்தால் தெய்வீக அறிவின் பொக்கிஷம் திறக்கப்படுகிறது.

Watch Swamiji Explain This Verse