Bhagavad Gita: Chapter 2, Verse 54

அர்ஜுன உவாச1 |

ஸ்தி21ப்1ரஞ்ஞஸ்ய கா1 பா4ஷா ஸமாதி4ஸ்த1ஸ்ய கே1ஶவ |

ஸ்தி21தீ4: கிம்1 ப்1ரபா4ஷேத1 கி1மாஸீத1 வ்ரஜேத1 கி1ம் ||54||

அர்ஜுனஹ உவாச—--அர்ஜுனன் கூறினார்; ஸ்தித-ப்ரஞ்ஞஸ்ய—---நிலையான புத்தியைக் கொண்டவர்; கா—-- என்ன; பாஷா—--பேச்சு; ஸமாதி-ஸ்தஸ்ய—--தெய்வீக உணர்வில் நிலைத்திருப்பது;கேஶவ—--கேஶியை கொன்ற ஶ்ரீ கிருஷ்ணர்; ஸ்திததீஹி—--அறிவொளி பெற்ற நபர்;கிம்—--என்ன; ப்ரபாஷேத—--பேசுகிறார்; கிம்—--எவ்வாறு; ஆஸீத—-- அமர்கிறார்; வ்ரஜேத—--நடக்கிறார்; கிம்—--எவ்வாறு

Translation

BG 2.54: அர்ஜுன் கூறினார்: ஓ கேஶவா, தெய்வீக உணர்வில் நிலைத்திருப்பவரின் மனநிலை என்ன? ஒரு நபர் எப்படி பேசுவார்? அவர் எப்படி நடக்கிறார்?

Commentary

ஸ்தி21 ப்1ரஞ்ஞாஸ்ய (நிலையான அறிவுத்திறன் கொண்டவர்) மற்றும் ஸமாதி4-ஸ்தா2 (தெய்வீக உணர்வில் நிலைத்திருப்பது,) ஆகிய பெயர்கள் அறிவொளி பெற்ற நபர்களுக்குப் பொருந்தும். சரியான யோக நிலை அல்லது சமாதி நிலையைப் பற்றி ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து கேள்விப்பட்ட அர்ஜுனன் ஒரு இயல்பான கேள்வியைக் கேட்கிறார். இந்த நிலையில் இருக்கும் ஒருவரின் மனதின் தன்மையை அறிய அவர் விரும்புகிறார். கூடுதலாக, ஒரு நபரின் நடத்தையில் இந்த தெய்வீக மனநிலை எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை அறிய அவர் விரும்புகிறார்.

இந்த வசனத்தில் தொடங்கி, அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பதினாறு கேள்விகளைக் கேட்கிறார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஸ்ரீ கிருஷ்ணர் கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம்,துறவு, மற்றும் தியானம் ஆகியவற்றின் ஆழமான இரகசியங்களை மற்ற தலைப்புகளில் வெளிப்படுத்துகிறார். அர்ஜுனன் கேட்ட பதினாறு கேள்விகள்:

தெய்வீக உணர்வில் நிலைத்திருப்பவரின் மனநிலை என்ன? (வசனம் 2.54)

பலன் தரும் செயல்களை விட அறிவே மேலானது என்று நீங்கள் கருதினால், ஏன் என்னை பயங்கரமான இந்த போரில் பங்கேற்க சொல்கிறீர்கள்? (வசனம் 3.1)

விருப்பமில்லாமல் கூடஒரு நபர் ஏன் பாவச் செயல்களைச் செய்ய பலவந்தமாக தூண்டப்படுகிறார்? (வசனம் 3.36)

நீங்கள் விவஸ்வானுக்குப் பிறகு பிறந்தவர். தொடக்கத்தில் நீங்கள் அவருக்கு இந்த அறிவியலை அறிவுறுத்தினீர்கள் என்பதை நான் எப்படி புரிந்துகொள்வது? (வசனம் 4.4)

செயல்களைத் துறக்கும் பாதையைப் போற்றி, மீண்டும் பக்தியுடன் செய்யும் பணியை போற்றி உயர்ந்ததாக கூறினீர்கள். இரண்டில் எது அதிக பலன் தரும் என்பதை தயவு செய்து தீர்க்கமாக சொல்லுங்கள்? (வசனம் 5.1)

ஓ கிருஷ்ணா, மனம் மிகவும் அமைதியற்றது, கொந்தளிப்பானது, வலிமையானது, மற்றும் பிடிவாதமானது. இதைக் கட்டுப்படுத்துவது காற்றை கட்டுப்படுத்துவதை விட கடினம் என்று தோன்றுகிறது. (வசனம் 6.34)

அடக்கப்படாத உணர்ச்சிகளால் கடவுளிடமிருந்து விலகி, இந்த வாழ்க்கையில் உயர்ந்த முழுமையை அடைய முடியாத ஆனால் நம்பிக்கையுடன் பாதையைத் தொடங்கும் தோல்வியுற்ற யோகியின் கதி என்ன?(வசனம் 6.37)

ப்3ரஹ்மம் என்றால் என்ன, கர்மம் என்றால் என்ன? அதி4பூ4தம் என்றால் என்ன, அதி4தெ3ய்வம் யார்? அதி4யஞ்ஞன் யார், அவர் இந்த உடலில் எப்படி வசிக்கிறார்? மது அரக்கனைக் கொன்றவனே, உறுதியான மனம் கொண்டவர்கள் மரணத்தின் போது உன்னுடன் எப்படி ஐக்கியமாக முடியும்? (வசனம் 8.1-2)

எல்லா உலகங்களிலும் வியாபித்திருக்கும் நீங்கள் உங்களுடைய தெய்வீக செல்வங்களை எனக்கு விவரியுங்கள். (வசனம் 10.16)

ஓ ஒப்புயர்வற்ற உன்னத தெய்வீக ஆளுமையே, உங்களது பிரபஞ்ச வடிவத்தை காண நான் ஏங்குகிறேன்.. (வசனம் 11.3)

அனைத்து படைப்புகளுக்கும் முன்பே இருந்த நீங்கள் யார் என்பதை அறிய விரும்புகிறேன். ஏனெனில் உங்களது இயல்பும் செயல்பாடும் என்னை மயக்குகின்றன . (வசனம் 11.31)

உனது தனிப்பட்ட ரூபத்தில் உறுதியுடன் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுக்கும், உருவமற்ற ப்ரஹ்மனை வழிபடுபவர்களுக்கும் இடையே, யோகத்தில் யாரை சிறந்தவர் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? (வசனம் 12.1)

நான் ப்ரக்ருதி (இயற்கை) மற்றும் புருஷ் (அனுபவிப்பவர்) பற்றி அறிய விரும்புகிறேன். செயல்பாடுகளின் துறை என்ன, மற்றும் துறையை அறிந்தவர் யார்? அறிவின் தன்மை மற்றும் அறிவின் பொருள் என்ன? (வசனம் 13.1)

ஒப்புயர்வற்ற ஸ்ரீகிருஷ்ணா, மூன்று குணங்களைக் கடந்தவர்களின் குணாதிசயங்கள் யாவை? அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள்? குணாதிசயங்களின் அடிமைத்தனத்தைத் தாண்டி அவர்கள் எப்படிக் கடந்தார்கள்? (வசனம் 14.21)

வேதத்தின் கட்டளைகளைப் புறக்கணித்து நம்பிக்கையுடன் வழிபடுபவர்களின் நிலைமை என்ன? (வசனம் 17.1)

ஸன்யாஸத்தின் (துறப்பு) தன்மை மற்றும் அது தியாகம் அல்லது செயல்களின் பலனைத் துறப்பதில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதைப் புரிந்துகொள்ள விரும்புகிறேன். (வசனம் 18.1)

Watch Swamiji Explain This Verse