Bhagavad Gita: Chapter 2, Verse 9

ஸஞ்ஜய உவாச1 |
ஏவமுக்1த்1வா ஹ்ருஷீகே1ஶம் கு3டா3கே1ஶ: ப1ரந்த11 |

ந யோத்1ஸ்ய இதி1 கோ3விந்த3முக்1த்1வா தூ1ஷ்ணீம் ப3பூ4வ ஹ ||9||

ஸஞ்ஜய உவாச-—-ஸஞ்ஜயன் கூறினார்; ஏவம்-—-இவ்வாறு; உக்த்வா-—பேசியபின்; ஹ்ருஷீகேஶம்-—-மனம் மற்றும் இந்திரியங்களின் ஏகாதிபதி;  குடாகேஶஹ---உறக்கத்தை வென்ற அர்ஜுனன்;  பரந்தப-—எதிரிகளை தண்டிப்பவர்;; ந யோத்ஸ்ய-—-நான் போரிட மாட்டேன்;  இதி---என்று; கோவிந்தம்-—-இந்திரியங்களுக்கு இன்பம் அளிக்கும் ஶ்ரீ கிருஷ்ணரிடம்; உக்த்வா-—-கூறி;  தூஷ்ணீம்—--அமைதி; பபூவ---ஆகி; ஹ-—-விட்டார்

Translation

BG 2.9: ஸஞ்ஜயன் கூறினார்: இவ்வாறு பேசிவிட்டு, எதிரிகளை தண்டிக்கும் குடா கேஶன், ஹ்ருஷிகேஷிடம், 'கோவிந்தா, நான் போரிட மாட்டேன்' என கூறி, அமைதியாகி விட்டார்.

Commentary

சாமர்த்தியசாலியான ஸஞ்ஜயன், த்ருதராஷ்டிரருக்குத் தனது உரையில், அவர் குறிப்பிடும் ஆளுமைகளுக்கு மிகவும் பொருத்தமான பெயர்களைப் பயன்படுத்துகிறார். இங்கே, அர்ஜுனன் குடாகேஷன் அல்லது 'தூக்கத்தை வென்றவன்' என்று அழைக்கப்படுகிறார். உறக்கம் எல்லா உயிர்களையும் அதற்கு அடிபணிய வைப்பதற்கான சக்தியைக் கொண்டது. ஆனால், அர்ஜுனன் தன் மன உறுதியுடன், அவர் அனுமதித்தால் மட்டுமே உறக்கம் வரும் என்று தன்னைத்தானே நெறிப்படுத்திக் கொண்டவர். அர்ஜுனனுக்கு குடாகேஷ் என்ற பெயரைப் பயன்படுத்துவதன் மூலம் ஸஞ்ஜயன் திருதராஷ்டிரரிடம், ‘இந்த ஆண்களின் மத்தியில் கதாநாயகன் தூக்கத்தை வென்றது போல், தனது அவநம்பிக்கையையும் அவர் வெல்வார்' என்று நுட்பமாக சுட்டிக்காட்டுகிறார். மேலும், ஸ்ரீ கிருஷ்ணருக்கு அவர் பயன்படுத்தும் வார்த்தை ஹ்ருஷிகே1ஷ் அல்லது 'மனம் மற்றும் புலன்களின் ஏகாதிபதி'. இங்குள்ள நுட்பமான குறிப்பு என்னவென்றால், தனது புலன்களுக்கு ஏகாதிபதி ஆக இருப்பவர் நிச்சயமாக நிகழ்வுகள் சரியாக நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்வார்.

Watch Swamiji Explain This Verse