Bhagavad Gita: Chapter 18, Verse 20

ஸர்வபூ4தே1ஷு யேனைக1ம் பா4வமவ்யயமீக்ஷதே1 |

அவிப4க்11ம் விப4க்1தே1ஷு த1ஜ்ஞ்ஞானம் வித்3தி4 ஸாத்1த்1விக1ம் ||20||

ஸர்வ-பூதேஷு---—எல்லா உயிர்களுக்குள்ளும்; யேன--—இதன் மூலம்; ஏகம்--—ஒன்று; பாவம்--—இயற்கை; அவ்யயம்—--அழியாத; ஈக்ஷதே--—ஒருவர் காண்கிறார்.;அவிபக்தம்—--பிரிக்கப்படாத; விபக்தேஷு---—பன்முகத்தன்மையில்; தத்—--அது;ஞானம்—--அறிவு; வித்தி--—புரிந்துகொள்; ஸாத்விகம்----நன்மையின் வழியில்.

Translation

BG 18.20: அறிவு நன்மையின் வழியில் இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள், இதன் மூலம் ஒரு நபர் அனைத்து பலதரப்பட்ட உயிரினங்களுக்குள்ளும் பிரிக்கப்படாத அழியாத உண்மையைக் காண்கிறார்.

Commentary

படைப்பானது பல்வேறு உயிரினங்கள் மற்றும் ஜடப்பொருள்களின் பரந்த தோற்றத்தை அளிக்கிறது. ஆனால் இந்த வெளிப்படையான பன்முகத்தன்மையின் அடி மூலக்கூறு பரம இறைவன். இந்த அறிவைப் பற்றிய கண்ணோட்டம் உடையவர்கள் ஒரு மின்பொறியாளர் மின்சாரம் வெவ்வேறு சாதனங்கள் வழியாகப் பாய்வதைப் பார்ப்பது போல, ஒரு பொற்கொல்லர் அதே தங்கத்தை வெவ்வேறு ஆபரணங்களில் வார்ப்பதைப் போல பல்வேறு படைப்பின் பின்னால் இருக்கும் ஒற்றுமையைக் காண்கிறார்கள். ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது:

வத3ந்தி11த்11த்1வ வித3ஸ்த1த்1வம் யஜ்-ஞானமத்3வயம் (1.2.11)

‘உண்மையை அறிந்தவர்கள், இரண்டாவதாக இல்லாமல், ஒரே ஒரு சக்திதான் இருக்கிறது என்று கூறியுள்ளனர்.’ சைதன்ய மஹாபிரபு, கடவுளை, பின்வரும் நான்கு அளவுகோல்களின் அடிப்படையில் ஸ்ரீ கிருஷ்ணராக, அத்வய ஞான தத்வ (இரண்டாவது இல்லாத ஒன்று, ஒரே விஷயம் மற்றும் படைப்பில் உள்ள அனைத்தும்) என்று குறிப்பிட்டார்:

1. ஸஜாதீ1ய பே43 ஶூன்ய (அவர் அனைத்து ஒத்த ஆளுமைகளுடன் கூடியவர்): ஸ்ரீகிருஷ்ணர் ராம், சிவன் மற்றும் விஷ்ணு போன்ற கடவுளின் பல்வேறு வடிவங்கள் ஒரே கடவுளின் வெவ்வேறு வெளிப்பாடுகள்.  

ஸ்ரீ கிருஷ்ணர் அவரின் மிகச்சிறிய பாகங்களான ஆத்மாக்களுடன் ஒன்றாக இருக்கிறார், ஒரு துண்டானது அதன் முழுமையுடன் ஒன்று பட்டதாகும், அதே போல் தீப்பிழம்புகள் சிறிய பகுதிகளாக இருக்கும் நெருப்புடன் ஒன்று பட்டதாகும்.

2. விஜாதீ1ய பே43 (அவர் அனைத்து ஒற்றுமையற்ற ஸ்தூலப் பொருள்களோடு ஒன்று பட்டவர்): கடவுளுக்கு வேறுபட்டது மாயா, இது உணர்ச்சியற்றது, அதே சமயம் கடவுள் உணர்வுள்ளவர். இருப்பினும், கடவுளின் ஆற்றலான மாயா மற்ற ஆற்றல்களை போலவே அதன் ஆற்றலுடன் ஒன்று பட்டது. உதாரணமாக, நெருப்பின் ஆற்றல் அதன் வெப்பம் மற்றும் ஒளியிலிருந்து வேறுபடாதது போல.

3. ஸ்வக3த்1ய பே43 (அவரது உடலின் பல்வேறு பாகங்கள் அவரிடமிருந்து வேறுபட்டவை அல்ல): கடவுளின் உடலைப் பற்றிய ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அனைத்து உறுப்புகளும் மற்ற அனைத்து உறுப்புகளின் செயல்பாடுகளையும் செய்கின்றன. ப்3ரஹ்மஸம்ஹிதை1 கூறுகிறது:

அங்கா3னி யஸ்ய ஸக1லேந்த்3ரிய-விருத்1தி1-மந்தி1

1ஶ்யந்தி1 பா1ந்தி11லயந்தி1 சி1ரம் ஜக1ந்தி1 (5.32)

‘அவரது உடலின் ஒவ்வொரு உறுப்புகளாலும், கடவுள் பார்க்கவும், கேட்கவும், பேசவும், நுகரவும், உண்ணவும், சிந்திக்கவும் முடியும்.’ எனவே, கடவுளின் உடலின் அனைத்து உறுப்புகளும் அவரிடமிருந்து வேறுபட்டவை அல்ல.

4. ஸ்வயம் ஸித்34 (அவருக்கு வேறு எந்த அமைப்பின் ஆதரவும் தேவையில்லை): மாயா மற்றும் ஆன்மா ஆகிய இரண்டும் கடவுளைச் சார்ந்து இருக்கின்றன. அவர் அவர்களை உற்சாகப்படுத்தவில்லை என்றால், அவை இல்லாமல் போய்விடும். மறுபுறம், கடவுள் மிகவும் சுதந்திரமானவர் மற்றும் அவரது இருப்புக்கு வேறு எந்த அமைப்பின் ஆதரவும் தேவையில்லை.

ஒப்புயர்வற்ற ஸ்ரீ கிருஷ்ணர் மேலே பட்டியலிடப்பட்டுள்ள நான்கு பிரிவுகளையும் திருப்திப்படுத்துகிறார், இதனால் அவர் அத்3வய ஞான த1த்1வ ஆவார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவரே படைப்பில் உள்ள அனைத்தும். இந்தப் புரிதலுடன், முழுப் படைப்பையும் கடவுளோடு ஐக்கியமாக வைத்துப் பார்க்கும்போது, ​​அது ஸாத்வீக (நன்மை) அறிவாகக் கருதப்படுகிறது. அத்தகைய அறிவின் அடிப்படையிலான அன்பு இனம் சார்ந்தது அல்ல, மாறாக அது உலகளாவியது.