Bhagavad Gita: Chapter 18, Verse 9

கா1ர்யமித்1யேவ யத்11ர்ம நியத1ம் க்1ரியதே1‌ர்ஜுன |

ஸங்க3ம் த்1யக்1த்1வா ப2லம் சை1வ ஸ த்1யாக3: ஸாத்1த்1விகோ1 மத1: ||9||

கார்யம்—--கடமையாக; இதி---—என; ஏவ--—உண்மையில்; யத்—--எது; கர்ம நியதம்--—கட்டாயமான செயல்கள்; க்ரியதே—--செய்யப்படும்; அர்ஜுன—-அர்ஜுனன்; ஸங்கம்--—பற்றுதல்; த்யக்த்வா—--துறப்பது; ஃபலம்—--வெகுமதி; ச—--மற்றும்; ஏவ--—நிச்சயமாக; ஸஹ--—அத்தகைய; தியாகஹ--—செயல்களின் பலனை அனுபவிப்பதற்காக ஆசைகளைத்----துறப்பது; ஸாத்விகஹ--—-நன்மையின் முறையில்; மதஹ——கருதப்படுகிறது.

Translation

BG 18.9: ஓ அர்ஜுனா, கடமையின் பிரதிபலிப்பாக, எந்த ஒரு வெகுமதியின் மீதுள்ள பற்றுதலை துறந்து செய்யப்படும் செயல்கள், நன்மையின் இயல்பில் துறப்பதாகக் கருதப்படுகிறது.

Commentary

ஸ்ரீ கிருஷ்ணர் இப்போது நமது கடமைகளை நிறைவேற்றும், ஆனால், செயல்களின் பலன் மீதான பற்றுதலைக் கைவிடும் உயர்ந்த வகையான துறவு பற்றி விவரிக்கிறார்.

நற்குணத்தின் (நன்மை) முறையில் அமைந்துள்ள மிக உயர்ந்த துறவு என்று அவர் இதை விவரிக்கிறார். ஆன்மீக சாதனைக்கு துறவு கண்டிப்பாக அவசியம். ஆனால் பிரச்சனை என்னவென்றால், துறவு பற்றிய மக்களின் புரிதல் மிகவும் ஆழமற்றது. மேலும், அவர்கள் அதை செயல்களை வெளிப்புறமாக கைவிடுவதாக மட்டுமே பார்க்கிறார்கள். அத்தகைய துறத்தல் பாசாங்குத்தனத்திற்கு இட்டுச் செல்கிறது. இதில், வெளிப்புறத்தில் துறந்தவரின் ஆடைகளை அணிந்த போதிலும், மனதளவில் ஒருவர் புலன்களின் பொருட்களைப் பற்றிச் சிந்தனை செய்கிறார் இந்தியாவில் பல ஸாதுக்கள் இந்த வகையில் உள்ளனர். அவர்கள் இறைவனை உணரும் உன்னத நோக்கத்துடன் உலகை விட்டு வெளியேறினர், ஆனால் புலன்களின் பொருள்களிலிருந்து மனம் இன்னும் விலகாததால், அவர்களின் துறவு விரும்பிய பலனைத் தரவில்லை. இதன் விளைவாக, அவர்களின் செயல்கள் தங்களை உயர்ந்த ஆன்மீக வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லவில்லை என்பதைக் கண்டறிந்தனர். குறைபாடு அவர்கள் வரிசை படுத்துவதில் இருந்தது. அவர்கள் முதலில் வெளிப்புற துறவறத்தை ஏற்று அதன் பிறகு உள் பற்றின்மைகாக பாடுபட்டனர். இந்த வசனத்தின் அறிவுறுத்தலின்படி இந்த வரிசை பாட்டை தலைகீழாக மாற்றி முதலில் உள் பற்றின்மையை வளர்த்துக் கொண்டு பின்னர் வெளிப்புறமாக துறக்க வேண்டும்.