ப்3ரஹ்மபூ4த1: ப்1ரஸன்னாத்1மா ந ஶோச1தி1 ந கா1ங்க்ஷதி1 |
ஸம: ஸர்வேஷு பூ4தே1ஷு மத்3ப4க்1தி1ம் லப4தே1 ப1ராம் ||54||
ப்ரஹ்ம--பூதஹ----ப்ரஹமத்தை உணர்தலில் நிலைத்திருப்பவர்; ப்ரஸன்ன-ஆத்மா---—மன அமைதியுடன்; ந—இல்லை; ஶோசதி—---துக்கம்; ந—இல்லை;காங்க்ஷதி--—விரும்புவது; ஸமஹ--—சமமாக; ஸர்வேஷ--—எல்லா ; பூதேஷு—உயிரினங்களிடத்தும்; மத்-பக்திம்---என்னிடம் உயர்ந்த பக்தியை; லபதே-—அடைகிறர்; பராம்--—உயர்ந்த.
Translation
BG 18.54: ஆழ்நிலையான ப்ரஹமத்தை உணர்தலில் நிலைத்திருப்பவர் துக்கம் மற்றும் விருப்பம் அற்று மனரீதியாக பழகுவதால், அத்தகைய யோகி என்னிடம் உயர்ந்த பக்தியை அடைகிறர்.
Commentary
ஸ்ரீ கிருஷ்ணர் தனது முழுமை நிலை பற்றிய விளக்கத்தை முடிக்கிறார். ப்3ரஹ்ம-பூ4தா1ஹா என்ற வார்த்தைகள் ப்ரஹ்மத்தை உணரும் நிலையைக் குறிக்கின்றன. அதில் அமைந்துள்ள ஒருவர் கொந்தளிப்பு மற்றும் வேதனையான அனுபவங்களால் பாதிக்கப்படாத ப்1ரஸன்னாத்1மா -அமைதியானவர். நஶோச1தி1 என்றால் ஒருவர் துக்கப்படுவதில்லை அல்லது முழுமையற்ற தன்மையை உணர்வதில்லை. .ந கா1ங்க்ஷதி1 என்றால், ஒருவன் தன் இன்பத்தைப் பெறுவதற்காகப் பொருள் பொருட்களை விரும்புவது அல்ல. இருப்பினும், ஸ்ரீ கிருஷ்ணர் வசனத்தை ஒரு திருப்பத்துடன் முடிக்கிறார். அத்தகைய உணரப்பட்ட அறிவின் நிலையில், ஒருவர் கடவுள் மீதான தெய்வீக அன்பை (ப1ரா ப4க்1தி1யை) அடைகிறார் என்று அவர் கூறுகிறார்.
ஞானிகள் பக்தி என்பது ப்ரஹமத்தை அடையும் ஒரு இடைநிலைப் படியாக செய்யப்பட வேண்டியது என்று கூற விரும்புகிறார்கள். பக்தி இதயத்தைச் சுத்தப்படுத்தும் நோக்கத்திற்காக செய்யப்படுவது என்றும் மேலும் பயணத்தின் முடிவில் ஞானம் மட்டுமே உள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர். எனவே, உறுதி வாய்ந்த புத்தியை உடைய புத்திசாலிகள் பக்தியை புறக்கணித்து அறிவை மட்டுமே வளர்த்துக் கொள்ளலாம் என்று பரிந்துரைக்கின்றனர். ஆனால் இந்த வசனம் அத்தகைய கண்ணோட்டத்தை மறுக்கிறது. ஞானத்தின் உயர்ந்த உணர்தலை அடைந்த பிறகு, ஒருவர் தெய்வீக அன்பை வளர்த்துக் கொள்கிறார் என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். ஸ்ரீமத் பாகவதத்தில் வேதவியாசர் இதையே அறிவித்தார்:
ஆத்1மாராமாஶ் ச1 முனயோ நிர்கி3ரந்தா2 அப்1 யுருக்1ரமே
கு1ர்வந்தி1 அஹைது1கி1ம் ப4க்1தி1ம் இத்1த2ம்-பூ4த1-கு3ணோ ஹரிஹி (1.7.10)
'ஆத்மாராம் (சுயத்தில் மகிழ்ந்து) சுயஅறிவில் நிலைபெற்று, பொருள் பந்தங்களில் இருந்து விடுபட்ட பூரணமான ஆன்மாக்கள் கூட கடவுளிடம் பக்தி கொள்ள விரும்புகின்றனர். கடவுளின் மிகச்சிறந்த குணங்கள், விடுதலை பெற்ற ஆன்மாக்களையும் ஈர்க்கும் வகையில் உள்ளன.’ சுயஅறிவை அடைந்து, உருவமற்ற ப்ரஹமத்தை உணர்தலில் நிலைபெற்ற பல புகழ்பெற்ற பல ஞானிகளின் உதாரணங்கள் உள்ளன. இருப்பினும், அவர்கள் கடவுளின் ஆழ்நிலை தெய்வீக குணங்களைப் பற்றிய ஒரு பார்வையைப் பெற்றபோது, அவர்கள் இயல்பாகவே பக்தியின் பக்கம் ஈர்க்கப்பட்டனர். நான்கு யுகங்களில் இருந்து அத்தகைய ஞானிகளின் எடுத்துக்காட்டுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
ப்3ரஹ்மாவின் நான்கு மகன்கள்-ஸனத்குமார், ஸனதன் குமார், ஸனக் குமார் மற்றும் ஸனந்தன் குமார் ஸத்ய யுகத்தில் மிகப் பெரிய ஞானிகள். அவர்கள் பிறப்பிலிருந்தே சுய-உணர்வு பெற்றவர்கள், அவர்களின் மனம் எப்போதும் உருவமற்ற ப்ரஹ்மத்தில் மூழ்கியிருந்தது. இந்த நான்கு சகோதரர்களும் ஒருமுறை விஷ்ணுவின் தெய்வீக இருப்பிடமான வைகுண்டத்திற்குச் சென்றனர். அங்கு, இறைவனின் தாமரை பாதங்களில் உள்ள துளசி இலைகளின் நறுமணம் அவர்களின் நாசிக்குள் நுழைந்து, அவர்களின் இதயங்களில் பரவசத்தை ஏற்படுத்தியது. உடனடியாக, பண்புகளை வெளிப்படுத்தாத ப்ரஹ்மனைப் பற்றிய அவர்களின் தியானம் முடிந்து, ஸ்ரீ விஷ்ணுவின் மீதுள்ள தெய்வீக அன்பின் பேரின்பத்தில் மூழ்கினர். அவர்கள் அவரிடம் ஒரு வரத்திற்காக மன்றாடினார்கள்:
கா1மம் ப4வஹ ஸ்வ-வ்ரிஜினைர் நிரயேஷு நஹ ஸ்தா1
ச்1சே1தோ1 ’லிவத்4 யதி3 நு தே1 ப1த3யோ ரமேத1
(பா4க3வத1ம் 3.15.49)
‘ஓ ஒப்புயர்வற்ற இறைவனே , உமது பாத தாமரைகளில் இருந்து வெளிப்படும் தெய்வீக அன்பான பேரின்பத்தைப் பருகும் வாய்ப்பை எங்கள் மனம் பெறும் வரை, நீங்கள் எங்களை நரகத்திற்கு அனுப்பினாலும் எங்களுக்கு கவலையில்லை.'கற்பனை செய்து பாருங்கள், உருவமற்ற ப்ரஹ்மத்தை உணர்ந்த பிறகும், இந்த மிகச் சிறந்த ஞானிகள் கடவுளின் தனிப்பட்ட வடிவத்தின் பேரின்பத்திற்காக நரகத்தில் வசிக்கத் தயாராக இருந்தனர்.
இப்போது த்1ரேதா1 யுகத்திற்கு செல்வோம். இக்காலத்தில் தலைசிறந்த ஞானி அரசர் ஜனகர். அவர் ராமரின் நித்திய வாழ்க்கைத் துணையான சீதையின் தந்தை. அவர் விதேஹ என்றும் அழைக்கப்பட்டார், அவர் உடலின் அனைத்து உணர்வுகளுக்கும் அப்பாற்பட்டவர். அவரது மனம் உருவமற்ற ப்ரஹ்மத்தில் எப்போதும் லயித்து இருக்கும். ஒரு நாள், விஸ்வாமித்திர முனிவர் ராமர் மற்றும் லட்சுமணருடன் அவரை சந்திக்க வந்தார். அப்போது என்ன நடந்தது என்பது ராமாயணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.. .
இன்ஹி பிலோக1த1 அதி1 அனுராகா3, ப3ரப3ஸ ப்ரஹ்மஸுகஹிஹி மன தியாக3
‘ராமரைக் கண்டதும், மன்னர் ஜனகர் உருவமற்ற ப்ரஹ்மனின் பேரின்பத்திலிருந்து பிரிந்து, பரம இறைவனின் தனிப்பட்ட வடிவில் ஆழ்ந்தார்.’
வேத வியாஸரின் மகன் ஸுகதேவ் துவாபர யுகத்திதல் மிக உயர்ந்த ஞானி ஆவார். அவர் உலகில் தோன்றினால், மாயா---ஜட சக்தி தன்னை வென்றுவிடும் என்று எண்ணி, பன்னிரெண்டு வருடங்கள் தன் தாயின் கர்ப்பத்தில் இருந்ததால், அவர் மிகவும் உயர்ந்தவர் என்று புராணங்கள் விவரிக்கின்றன. இறுதியாக, நாரத முனிவர், அவரது தாயின் காது வழியாக அவரிடம் பேசி, எதுவும் நடக்காது என்று அவருக்கு உறுதியளித்து, அவர் அவரது தாயின் கர்ப்பத்தில் இருந்து வெளிப்பட என்று வேண்டும் என்று கூறினார். பின்னர், அவரது தாயின் கர்ப்பத்தில் இருந்து அவர் வெளிப்பட்டு, அவரது யோக சக்தியால், தனது உடலை பன்னிரெண்டு வயதுடையவராக விரிவுபடுத்தினார் மற்றும் காட்டில் வசிக்க வீட்டைத் துறந்தார். அங்கு, அவர் விரைவில் சமாதியின் மிக உயர்ந்த நிலையை அடைந்தார்.
வருடங்கள் ஓடின, ஒரு நாள் வேத வியாஸரின் மாணவர்கள் காட்டில் விறகு வெட்டிக் கொண்டிருந்தபோது, அவரை ஸமாதியில் பார்த்தனர். அவர்கள் திரும்பிச் சென்று முனிவரிடம் அதைக் கூறினார்கள். பகவான் கிருஷ்ணரின் தனிப்பட்ட வடிவத்தின் அழகை விவரிக்கும் ஒரு வசனத்தை ஸுகதேவரின் காதுகளில் கூறும்படி அவர்களிடம் கூறினார்:
ஆத்1மாராமாஶ் ச முனயோ ப3ர்ஹாபீ1ட3ம் நட1வரபு1ஹ க1ர்ணயோ ஹோ கர்1ணிகா1ரம்
பி3ப்4ரத் வாஸஹ க1னக1-க1பிஷம் வைஜயந்தீ1ம் ச1 மாலாம்.
ரன்த்4ரான் வேணோரத4ரசுத4யா பூ1ரயன் கோ3பவிருந்த3ய்ர்
வ்ருந்தா3ரண்யம் ஸ்வப1த3ரமணம் ப்1ரவிஶத்3 கீ3த1கீ1ர்த்தி1ஹி
(பா4க3வத1ம்-10.21.
‘ஸ்ரீ கிருஷ்ணர் தனது தலையில் மயில் இறகுகள் கொண்ட கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டு, சிறந்த நடனக் கலைஞராக அவரது வடிவத்தை வெளிப்படுத்துகிறார். அவரது காதுகள் நீல நிற கர்ணிகா மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அவரது சால்வை பளபளப்பான தங்க நிறத்தைக்கொண்டிருக்கிறது. வைஜயந்தி1 மணிகளால் ஆன மாலை1யை அணிந்துள்ளார். அவர் தனது புல்லாங்குழலின் துளைகளை அவரது உதடுகளிலிருந்து தேன் கொண்டு நிரப்புகிறார். அவர் பிருந்தாவனத்தில் அவரது மாடு மேய்க்கும் நண்பர்களால் சூழப்பட்டு நுழையும் போது, அவரது புகழ் பாடப்படுகிறது., அவரது பாதச்சுவடுகளின் அடையாளங்கள் பூமியை அழகுபடுத்துகிறது.' ஸுகதேவர் அந்த வசனம் காதில் நுழைந்தபோது உருவமற்ற ப்ரஹ்ம்மத்தில் லயித்து இருந்தார். திடீரென்று, அவரது தியானத்தின் புலனால் அறியப்படும்பொருள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மயக்கும் வடிவமாக மாறியது. கடவுளின் தனிப்பட்ட வடிவத்தின் பேரின்பத்தில் அவர் மிகவும் ஆழமாக ஈர்க்கப்பட்டார், அவர் தனது சமாதியை விட்டுவிட்டு தனது தந்தை வேத வியாஸரிடம் திரும்பினார். அவரிடமிருந்து பக்தியின் இனிமை நிறைந்த ஸ்ரீமத் பாகவதத்தைக் கேட்டறிந்தார். பின்னர், கங்கைக் கரையில், அர்ஜுனனின் பேரன் பரீக்ஷித் மன்னனிடம் அதைத் தெரிவித்தார். இவ்வாறே, து3வாப1ர யுகத்தின் மிகப் பெரிய ஞானி பக்தியின் பாதையில் ஈர்க்கப்பட்டார்.
இறுதியாக, நாம் கலியுகத்திற்கு வருகிறோம். ஜகத்குரு சங்கராச்சாரியார் இந்த யுகத்தின் மிகப் பெரிய ஞானியாக பரவலாகக் கருதப்படுகிறார்.. அவர் அத்வைத வாதத்தின் (இருமை அல்லாத) பிரச்சாரகர் என்று பரவலாகப் பாராட்டப்படுகிறார், அதில் அவர் குணங்கள் இல்லாத (நிர்குணம்), பண்புகள் அற்ற நிர்விஶேஷ்), உருவமற்ற ப்ரஹமன் என்ற ஒரே ஒரு பொருள் மட்டுமே இருப்பதாகக் கூறினார். ஆனால், இருபது வயதிலிருந்து முப்பத்திரண்டாம் வயதில் உடலை விட்டுப் பிரியும் வரை, கிருஷ்ணர், ராமர், சிவன், துர்க்கை ஆகிய ஒப்புயர்வற்ற தெய்வீக ஆளுமைகளைப் போற்றி நூற்றுக்கணக்கான வசனங்களை அவர் எழுதியுள்ளார் என்பது பலருக்குத் தெரியாது. மேலும் அவர் நான்கு தெய்வீக உறைவிடங்களுக்கும் (இந்தியாவின் நான்கு மூலைகளிலும் உள்ள ஆன்மீக மையங்கள்) விஜயம் செய்தார். அவை அனைத்திலும் கடவுளின் தனிப்பட்ட வடிவங்களின் தெய்வங்களை வணங்கினார். ப்1ரபோ3த்4 ஸுதா4க1ரில் அவர் எழுதுகிறார்:
கா1ம்யோபா1ஸநயார்த்2யத்1யநுதி3நம் கி1ஞ்சித்1ஃப2லம் ஸ்வேஸித1ம்
கே1சி1த்1 ஸ்வர்க3மதா2ப1வர்க3மப1ரே யோகா3தியஞ்ஞாதி3பி1ஹி
அஸ்மாக1ம் யது3நந்3னாங்ரியுக3லதி4யாநாவதா4நார்தி2னாம்
கி1ம் லோகே1 த3மேன கி1ம் ந்ரிபதி1நா ஸ்வர்கா1ப1வர்கைஶ்ச1 கி1ம்
(வசனம் 250)
'விண்ணுலகத்தை அடைவதற்காக நீதியான செயல்களைச் செய்பவர்கள் அவ்வாறு செய்யலாம். ஞான அஷ்டாங்க யோகத்தின் வழியாக விடுதலையை விரும்புபவர்கள் அந்த இலக்கைத் தொடரலாம். என்னைப் பொறுத்தவரை, இந்த இரண்டு பாதைகளில் எதுவும் எனக்கு வேண்டாம். நான் ஸ்ரீ கிருஷ்ணரின் பாதங்களின் அமிர்தத்தில் மூழ்கிவிட விரும்புகிறேன். நான் உலக அல்லது சொர்க்க இன்பங்களையோ, விடுதலையையோ விரும்பவில்லை. நான் தெய்வீக அன்பின் பேரின்பத்தை அனுபவிக்கும் ஒரு ரசிகன்.’
உண்மை என்னவெனில், சங்கராச்சாரியார் ஸ்ரீ கிருஷ்ணரின் சிறந்த பக்தர். அவர் தனது பாஷ்யங்களில் (வர்ணனைகள்) போதித்தது காலத்தின் தேவையாக இருந்தது. அவர் பூமியில் தோன்றியபோது, பௌத்தம் இந்தியா முழுவதும் நிலவியது. இத்தகைய சூழலில், வேதங்களில் பௌத்தர்களின் நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்த, அவர் தனது பாஷ்யங்களை எழுதும் போது அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் பின்னர், கடவுளின் தனிப்பட்ட வடிவங்களுக்காக அவர் எழுதிய ஏராளமான ஸ்துதிகளில் (புகழ்ச்சிகள்) அவர் தனது உள்ளார்ந்த பக்தியை வெளிப்படுத்தினார். சங்கராச்சாரியார் கலி யுகத்தில், உயர்ந்த ஞானத்தை அடைந்து, பின்னர் பக்தி செய்த ஒருவருக்கு உதாரணமாக இருந்தார்