Bhagavad Gita: Chapter 18, Verse 66

ஸர்வத4ர்மான்ப1ரித்1யஜ்ய மாமேக1ம் ஶரணம் வ்ரஜ |

அஹம் த்1வாம் ஸர்வபா1பே1ப்4யோ மோக்ஷயிஷ்யாமி மா ஶுச1: ||66||

ஸர்வதர்மான்----அனைத்து வகையான தர்மங்களையும்; பரித்யஜ்ய----கைவிட்டு;மாம்—-- என்னிடம்; ஏகம்—--மட்டும்; ஶரணம்—--அடைக்கலம்; வ்ரஜ---—எடுத்து;அஹம்--—நான்; த்வாம்----உன்னை; ஸர்வ--—அனைத்து; பாபேப்யஹ--—பாவ விளைவுகளிலிருந்தும்;மோக்ஷயிஷ்யாமி—--விடுவிப்பேன்; மா—வேண்டாம்; ஶுசஹ---பயம்

Translation

BG 18.66: எல்லாவிதமான தர்மங்களையும் கைவிட்டு, என்னிடம் மட்டும் சரணடைந்து விடு. எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் நான் உன்னை விடுவிப்பேன்; பயப்படாதே.

Commentary

ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் ஒரே நேரத்தில் அவரது மனதை பக்தியில் ஈடுபடுத்தி, மற்றும் ஒரு போர்வீரராக தனது சுய தர்ம கடமையைச் செய்வதில் உடலை ஈடுபடுத்துதல் ஆகிய இரண்டு விஷயங்களைச் செய்யும்படி கேட்டுக் கொண்டிருந்தார். இதனால் அவர் அர்ஜுனனிடம் தனது க்ஷத்திரிய தர்மத்தை விட்டுவிடாமல், ஆனால் அதனுடன் பக்தியும் செய்யுமாறு வலியுறுத்தினார். இதுவே கர்ம யோகத்தின் கொள்கை. இப்போது, ​​பொருள் சார்ந்த தர்மத்தை கூட நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என்று கூறி. ஸ்ரீ கிருஷ்ணர் இந்த போதனையை மாற்றியமைக்கிறார். அர்ஜுனன் அனைத்து கடமைகளையும் துறந்து இறைவனிடம் சரணடைய முடியும். இதுதான் கர்ம சன்யாஸத்தின் கொள்கை. இங்கே, நாம் நமது அனைத்து ஜட தர்மங்களையும் துறந்தால், நாம் பாவப்பட்டவர்கள் ஆக மாட்டோமா என்று ஒருவர் கேள்வி எழுப்பலாம். ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் பயப்படாதே என்று கூறுகிறார்; அவர் எல்லா பாவங்களிலிருந்தும் அவரை விடுவித்து மற்றும் பொருள் இருப்பிலிருந்தும் அவரை விடுவிப்பார்.

ஸ்ரீ கிருஷ்ணரின் இந்த அறிவுறுத்தலைப் புரிந்து கொள்ள, நாம் தர்மம் என்ற சொல்லைப் புரிந்து கொள்ள வேண்டும். இது த்ரி என்ற மூல வார்த்தையிலிருந்து வருகிறது, அதாவது தாரண் கரனே யோக்கிய அல்லது 'நமக்கு ஏற்ற பொறுப்புகள், கடமைகள், எண்ணங்கள் மற்றும் செயல்கள்'. உண்மையில் இரண்டு வகையான தர்மங்கள் உள்ளன--- பொருள் தர்மம் மற்றும் ஆன்மீக தர்மம். இந்த இரண்டு வகையான தர்மங்களும் 'சுயம்' பற்றிய இரண்டு வெவ்வேறு புரிதல்களை அடிப்படையாகக் கொண்டவை. நாம் நம்மை உடலாக அடையாளப்படுத்தும்போது, ​​நமது தர்மம் என்பது நமது பொருள் நியமனங்கள், கடமைகள், நன்றிக்கடன் மற்றும் நெறி முறைகளின்படி தீர்மானிக்கப்படுகிறது. எனவே, நமது ஸரீரப் பெற்றோருக்குச் சேவை செய்வது, சமுதாயம் மற்றும் தேசத்திற்கான பொறுப்புகளை நிறைவேற்றுவது--- இவை அனைத்தும் பொருள் தர்மத்தின் ஒரு பகுதியாகும். இது அப1ர த4ர்மம் அல்லது பொருள் தர்மம் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் பிராமணர், க்ஷத்திரியர் முதலியவர்களின் தர்மங்களும் அடங்கும். எவ்வாறாயினும், நாம் நம்மை ஆன்மா என்று அடையாளப்படுத்தும்போது, ​​வர்ண ஆசிரமம் (சமூக வர்க்கம்) (வாழ்க்கையில் அந்தஸ்து) என்ற பொருள் சார்ந்த பெயர்கள் இல்லை. ஆன்மாவின் தந்தை, தாய், நண்பர், அன்புக்குரியவர் மற்றும் வசிக்குமிடம் அனைத்தும் கடவுள். எனவே, நமது ஒரே தர்மம் கடவுளுக்கு அன்பான பக்தி சேவையாக மாறுகிறது. இது ப1ர த4ர்மம் அல்லது ஆன்மீக34ர்மம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஒருவர் பொருள் தர்மத்தை விட்டு விட்டால், அது கடமை தவறியதால் பாவமாக கருதப்படுகிறது. ஆனால் ஒருவன் பொருள் தர்மத்தை விட்டுவிட்டு ஆன்மீக தர்மத்தில் அடைக்கலம் புகுந்தால் அது பாவம் அல்ல ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது:

தே3வர்ஷி-பூ4தாப்த1-ந்ரிணாம் பி1த்ரீணாம்

ந கி1ங்க1ரோ நாயம் ரிணீ ச1 ராஜன்

ஸர்வாத்1மனா யஹ ஶரணம் ஶரண்யம்

3தோ1 முகு1ந்த3ம் ப1ரிஹ்ருத்1ய க1ர்த1ம் (11.5.41)

கடவுளைச் சரணடையாதவர்களுக்கு ஐந்து கடன்கள் உள்ளன என்று இந்த வசனம் விளக்குகிறது: தேவலோக தெய்வங்கள், முனிவர்கள், முன்னோர்கள், பிற மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களுக்கு. இந்த ஐந்து வகையான கடன்களில் இருந்து நம்மை விடுவிப்பதற்கான பல்வேறு நடைமுறைகளை வர்ணாஷ்ரம் அமைப்பு கொண்டுள்ளது. இருப்பினும், ​​மரத்தின் வேர்களுக்கு நீர் பாய்ச்சுவதால் எவ்வாறு கிளைகள், இலைகள், பூக்கள் மற்றும் காய்களுக்கும் நீர் பாய்ச்சுவது போல கடவுளிடம் சரணடையும் போது இந்தக் கடன்கள் அனைத்திலிருந்தும் தானாகவே விடுபடுகிறோம். அதுபோலவே, கடவுளுக்குச் செய்யும் கடமையை நிறைவேற்றுவதன் மூலம், மற்ற அனைவருக்கும் நம் கடமையை தானாகவே நிறைவேற்றுகிறோம். எனவே, நாம் ஆன்மீக தர்மத்தில் சரியாக நிலைத்திருந்தால், பொருள் தர்மத்தை துறப்பதில் பாவம் இல்லை. உண்மையில், ஆன்மீக தர்மத்தில் முழுமையாகவும் முழு மனதுடன் ஈடுபடுவதே இறுதி இலக்கு. ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது:

அஞானைவம் கு3ணான் தோ3ஷான் மாயாதி3ஷ்டா1ன் அபி1 ஸ்வகா1ன்

4ர்மான் ஸந்த்1யஜ்ய யஹ ஸர்வான் மாம் ப4ஜேத1 ஸ ஸத்11மஹ

‘வேதங்களில் சரீர தர்மத்தை நிறைவேற்றுவது குறித்து எண்ணற்ற அறிவுரைகளை வழங்கியுள்ளேன். ஆனால், இவற்றில் உள்ள குறைகளை உணர்ந்து, விதிக்கப்பட்ட கடமைகளை துறந்து, என்னுடைய பக்தி சேவையில் ஈடுபடுபவர்களை, நான் சிறந்த சாதகர்களாகக் கருதுகிறேன்.’ ராமாயணத்தில், லட்சுமணன், கானகத்தில் ராமனுடன் செல்வதற்காக, அனைத்து பொருள் தர்ம கடமைகளையும் துறந்தார் என்பதை நாம் படிக்கிறோம். அவர் கூறினார்:

கு3ரு பி1து மாது1 ந ஜானஹு கா1ஹு, க1ஹஹு ஸுபாவ நாத11தி1யாஉ

மோரே ஸப3ஹிஞ் ஏக1 து1மா ஸ்வாமி, தீ3னப3ந்து4 உர அந்த1ரயாமி

ஓ இறைவனே, தயவுசெய்து என்னை நம்புங்கள், எனக்கு ஆசிரியர், தந்தை, தாய் அல்லது வேறு எந்த உறவினரையும் தெரியாது. என்னைப் பொறுத்த வரையில், வீழ்ந்தவர்களின் இரட்சகரும், இதயத்தை அறிந்தவருமான நீயே என் எஜமான் மற்றும் என் எல்லாமே.' இதேபோல், பிரஹலாத் கூறினார்:

மாதா1 நாஸ்தி1 பி1தா1 ந ’ஸ்தி1 ந ’ஸ்தி1 மே ஸ்வஜனோ ஜனஹ

‘எனக்கு தாய், தந்தை அல்லது உறவினர் யாரையும் தெரியாது (கடவுள் தான் எல்லாமே).

பகவத் கீதையில், ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனுக்கு வரிசையாக உயர்ந்த அறிவுரைகளை வழங்குகிறார். ஆரம்பத்தில், அவர் அர்ஜுனிடம் கர்மம் செய்யும்படி அறிவுறுத்தினார், அதாவது, ஒரு போர்வீரனாக அவரது பொருள் தர்மம் (வசனம் 2.31). ஆனால் பொருள் தர்மம் கடவுள்-உணர்வை ஏற்படுத்தாது; அது பரலோக வாசஸ்தலங்களுக்கு இட்டுச் செல்கிறது, மேலும் புண்ணியங்கள் குறைந்துவிட்டால், ஒருவர் திரும்பி வர வேண்டும்எனவே, ஸ்ரீ கிருஷ்ணர் அடுத்ததாக அர்ஜுனிடம் கர்ம யோகம் செய்யும்படி அறிவுறுத்தினார். அவர் அர்ஜுனனிடம் உடலுடன் போரிடவும், மனத்தால் கடவுளை நினைவு செய்யவும் (வசனம் 8.7) கேட்டுக் கொண்டார். கர்ம யோகத்தின் இந்த அறிவுறுத்தல் பகவத் கீதையின் பெரும்பகுதியை உருவாக்குகிறது. இப்போது இறுதியில், ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனிடம் செயல்களை துறக்கும் (கர்மசந்நியாசத்தை) பயிற்சி செய்யும்படி அறிவுறுத்துகிறார், அதாவது, அனைத்து பொருள் தர்மங்களையும் துறந்து, கடவுள் மீது அன்பான ஆன்மீக தர்மத்தை மட்டும் பின்பற்ற கூறுகிறார். அவர் , அது ஒரு போர்வீரராக அவரது கடமை என்பதால் அல்ல, மாறாக கடவுள் அவர் அவ்வாறு செய்ய விரும்புகிறார் என்பதற்காக போராட வேண்டும்,.

ஆனால் ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் அர்ஜுனுக்கு இந்த அறிவுரையை முன்பே கொடுக்கவில்லை? கர்ம யோகம் கர்ம ஸந்நியாஸத்தை விட உயர்ந்தது என்று அவர் கூறியபோது, ​​வசனம் 5.2-ல் தலைகீழாகப் பேசுவது போல் தோன்றியது ஏன்? இதை ஸ்ரீ கிருஷ்ண பகவான் அடுத்த வசனத்தில் தெளிவாக விளக்குகிறார்.