முக்1த1ஸங்கோ3னஹம்வாதீ3 த்4ருத்யுத்1ஸாஹஸமன்வித1: |
ஸித்3த்4யஸித்3த்4யோர்னிர்விகா1ர: க1ர்தா1 ஸாத்3த்4விக1 உச்1யதே1 ||26||
முக்த-ஸங்கஹ---—உலகப் பற்றுதலிருந்து விடுபட்டு; அனாஹம்-வாதீ—--அஹங்காரத்திலிருந்து விடுபட்டுட; த்ரிதி--—வலுவான மற்றும் உறுதியுடன்; உத்ஸாஹ—--உற்சாகத்துடன்.; ஸமன்விதஹ--—நற்பண்புடைய; ஸித்தி---அஸித்தியோஹோ-----வெற்றி மற்றும் தோல்வியில்; நிர்விகாரஹ-----பாதிக்கப்படாத; கர்தா—--வேலை செய்பவர்; ஸாத்விகஹ---—நன்மை முறையில்; உச்யதே----என்று கூறப்படுகிறது.
Translation
BG 18.26: அவர் அல்லது அவள் அஹங்காரம் மற்றும் பற்றுதல் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, உற்சாகம் மற்றும் உறுதியுடன், வெற்றி மற்றும் தோல்வியில் சமநிலையுடன் இருக்கும்போது நற்பண்புடையவர் என்று கூறப்படுகிறது.
Commentary
ஸ்ரீ கிருஷ்ணர் முன்பு அறிவு, செயல், செய்பவர் ஆகிய மூன்று வகைகளைக் குறிப்பிட்டார். அறிவு மற்றும் செயல்கள் ஆகிய இரண்டின் வகைகளை விவரித்த அவர் இப்போது மூன்று வகையான செயல்களைச் செய்பவர்களைப் பற்றி கூறுகிறார். நன்மை முறையில் சூழப்பட்டவர்கள் செயல் அற்றவர்களாக அல்ல என்று தெளிவுபடுத்துகிறார்; மாறாக, அவர்கள் உற்சாகத்துடனும் உறுதியுடனும் வேலை செய்கிறார்கள். வித்தியாசம் என்னவென்றால், அவர்களின் வேலை சரியான நனவில் செய்யப்படுகிறது. நன்மை முறையில் செயல்படுபவர்கள் முக்த-ஸங்கஹ, அதாவது, அவர்கள் உலகப் பற்றுதலிலுள்ள விஷயங்களில் ஈடுபட முயற்சிப்பதில்லை, மற்றும் உலக விஷயங்கள் ஆன்மாவுக்கு திருப்தியை அளிக்கும் என்று அவர்கள் நம்புவதில்லை. எனவே, அவர்கள் உன்னத நோக்கங்களுடன் வேலை செய்கிறார்கள். அவர்களின் நோக்கங்கள் தூய்மையானவையாக இருப்பதால், அவர்கள் தங்கள் முயற்சிகளில் உத்1ஸாஹ (ஆர்வம்) மற்றும் த்4ரிதி1 (வலுவான உறுதி) ஆகியவற்றால் நிரப்பப்படுகிறார்கள். அவர்களின் மனோபாவத்தால் வேலை செய்யும் போது அவர்களின் ஆற்றல் மிகவும் குறைந்த அளவில் விரயமாகிறது. இதனால், அவர்கள் தங்கள் உன்னத நோக்கங்களை நிறைவேற்ற அயராது உழைக்க முடிகிறது. அவர்கள் பெரிய காரியங்களைச் செய்தாலும், அவர்கள் அனஹவாதி 3 (அகங்காரம் இல்லாதவர்கள்), மேலும் அவர்கள் தங்கள் வெற்றிக்கான அனைத்துப் புகழையும் கடவுளுக்குச் செலுத்துகிறார்கள்