Bhagavad Gita: Chapter 18, Verse 42

ஶமோ த3மஸ்த11: ஶௌச1ம் க்ஷாந்தி1ரார்ஜவமேவ ச1 |

ஞானம் விஞ்ஞானமாஸ்தி1க்1யம் ப்3ரஹ்மக1ர்ம ஸ்வபா4வஜம் ||42||

ஶமஹ--—அமைதி; தமஹ---—கட்டுப்பாடு; தபஹ--—துறவு;ஶௌசம்---—தூய்மை க்ஷாந்திஹி:---- பொறுமை; ஆர்ஜவம்—--நேர்மை; ஏவ-—நிச்சயமாக; ச—--மற்றும்; ஞானம்—--அறிவு; விஞ்ஞானம்--—ஞானம்; ஆஸ்திக்யம்--—மறுமையில் நம்பிக்கை; ப்ரஹ்ம—--ஆசாரியர் வகுப்பின்; கர்ம--—வேலை; ஸ்வபாவ-ஜம்---ஒருவரின் உள்ளார்ந்த குணங்களால் பிறந்தது..

Translation

BG 18.42: அமைதி, கட்டுப்பாடு, துறவு, தூய்மை, பொறுமை, நேர்மை, அறிவு, ஞானம் மற்றும் மறுமையில் நம்பிக்கை - இவை ப்ராஹ்மணர்களுக்கான பணியின் உள்ளார்ந்த குணங்கள்.

Commentary

பிரதானமாக நன்மை முறையின் இயல்புகளைக் கொண்ட ப்ராஹ்மணர்களின் முதன்மைக் கடமைகள் துறவு மேற்கொள்வது, மனத்தூய்மை, பக்தி செய்வது மற்றும் அவர்களின் எடுத்துக்காட்டுளால் மற்றவர்களை ஊக்கப்படுத்துவது. எனவே, அவர்கள் சகிப்புத்தன்மையும், அடக்கமும், ஆன்மீக சிந்தனையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் தங்களுக்கும் மற்ற வகுப்பினருக்கும் வேத சடங்குகளைச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர்களின் இயல்பு அவர்களை அறிவின் மீதான அன்பின் பக்கம் சாய்த்தது. எனவே, கற்பித்தல் தொழில்-அறிவை வளர்ப்பது மற்றும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது -- அவர்களுக்கு ஏற்றதாக இருந்தது. அரசு நிர்வாகத்தில் தாங்களாகவே பங்கேற்காவிட்டாலும், நிர்வாகிகளுக்கு வழிகாட்டினார்கள். அவர்கள் வேத ஞானம் பெற்றிருந்ததால், சமூக மற்றும் அரசியல் விஷயங்களில் அவர்களின் கருத்துக்கள் பெரிதும் மதிக்கப்பட்டன.