அர்ஜுன உவாச1 |
நஷ்டோ1 மோஹ: ஸ்ம்ருதி1ர்லப்3தா4 த்1வத்1ப்1ரஸாதா3ன்மயாச்1யுத1 |
ஸ்தி1தோ1ஸ்மி க3த1ஸந்தே3ஹ: க1ரிஷ்யே வச1னம் த1வ ||73||
அர்ஜுனஹ உவாச--—அர்ஜுனன் கூறினார்; நஷ்டஹ---அகற்றப்பட்டது; மோஹஹ--—மாயை; ஸ்ம்ருதிஹி--—நினைவை; லப்தா—--மீண்டும் பெற்றேன்; த்வத்-ப்ரஸாதாத்--—உங்கள் அருளால்; மயா—---என்னால்; அச்யுதா---ஸ்ரீ கிருஷ்ணர், தவறா நிலையுடையவரே; ஸ்திதஹ-----அமைந்து; அஸ்மி--—நான்; கத-சந்தேஹஹ--- சந்தேகங்களிலிருந்து விடுபட்டு;கரிஷ்யே---—நான் செயல்படுவேன்; வசனம்—--அறிவுரைகள்; தவ--—உங்கள்.
Translation
BG 18.73: அர்ஜுனன் கூறினார்: ஓ தவறாநிலையுடையவரே, உமது அருளால் எனது மாயை நீங்கி, நான் அறிவில் நிலைத்துள்ளேன். நான் இப்போது சந்தேகங்களிலிருந்து விடுபட்டுள்ளேன், மேலும் உங்கள் அறிவுறுத்தல்களின்படி செயல்படுவேன்.
Commentary
ஆரம்பத்தில், ஒரு குழப்பமான சூழ்நிலையை எதிர்கொண்ட அர்ஜுனன் தனது கடமையில் குழப்பமடைந்தார். .சோகத்தில் மூழ்கிய அவர், ஆயுதங்களைத் துறந்து தேரில் அமர்ந்தார். தன் உடலையும் புலன்களையும் தாக்கிய துக்கத்திற்குத எந்தப் பரிகாரமும் கிடைக்கவில்லை என்று வாக்குமூலம் அளித்திருந்தார். ஆனால் அவர் இப்போது தன்னை முழுவதுமாக மாற்றியமைத்து, அறிவில் நிலைத்திருப்பதாகவும், இனி குழப்பமடையவில்லை என்றும் அறிவிக்கிறார். அவர் தன்னை கடவுளின் விருப்பத்திற்கு அற்பணித்து , ஸ்ரீ கிருஷ்ணர் அறிவுறுத்தியபடியே செய்வார். இதுவே பகவத் கீதையின் செய்தி அவரிடம் ஏற்படுத்திய தாக்கம்.. இருப்பினும், அவர் த்1வத்1 ப்1ரஸாதா3ன் மயாச்1யுத1 என்ற சொற்றொடரை சேர்கின்றார், அதாவது, ‘ஓ ஸ்ரீ கிருஷ்ணா, உங்களது சொற்பொழிவு மட்டுமல்ல, உங்களது கருணையே அறியாமையை நீக்கியது.
பொருள் அறிவுக்கு அருள் தேவையில்லை. நாம் கல்வி நிறுவனம் அல்லது ஆசிரியரிடம் பணம் செலுத்தி அறிவைப் பெறலாம், ஆனால் ஆன்மீக அறிவை வாங்கவோ விற்கவோ முடியாது. இது கிருபையால் வழங்கப்பட்டது விசுவாசம் மற்றும் பணிவு மூலம் பெறப்பட்டது. எனவே, பகவத் கீதையை நாம் ‘நான் மிகவும் புத்திசாலி. இந்த செய்தியின் நிகர மதிப்பு என்ன என்பதை நான் மதிப்பீடு செய்வேன்,' என்ற பெருமையுடன் அணுகினால், நம்மால் அதை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. நமது அறிவு வேதத்தில் சில பார்க்கக்கூடிய குறைபாட்டைக் கண்டறிந்து, அந்த சாக்குப்போக்கில், முழு வேதத்தையும் தவறானது என்று நிராகரிப்போம். கடந்த ஐயாயிரம் ஆண்டுகளில் பகவத் கீதையைப் பற்றிய பல வர்ணனைகள் மற்றும் தெய்வீக அறிக்கையின் எண்ணற்ற வாசகர்கள் இருந்திருக்கின்றனர். ஆனால் அர்ஜுனனைப் போல எத்தனை பேர் ஞானம் பெற்றிருக்கிறார்கள்? இந்த அறிவை நாம் உண்மையாகப் பெற விரும்பினால், அதைப் படிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், விசுவாசம் மற்றும் அன்பான சரணாகதியுடன் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளைப் பெற வேண்டும். அப்போது, அவருடைய அருளால், பகவத் கீதையின் உண்மைப் பொருள் நமக்கு வெளிப்படும்.